பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 க. சமுத்திரம் 'அவன் யங் பெல்லோ தானே சார்? அடுத்த வருடம் பண்ணிக்கிட்டா போச்சு. குடியா முழுகிடும்?” "அது மட்டுமில்லையாம். அவங்க அப்பாவுக்கு நோயாம். இவர் தான் ஒரே மகனாம்." "சாக்கு சொலலணுமுன்னா ஆயிரம் சொல்லலாம் சார்.” "ஒகேமிஸ்டர்பண்டாரம் நான் யோசிக்கிறேன்.தாங்க்யூபார் யுவர் சஜ்ஜஷன் வாரீங்களா. வழியிலே டிராப் பண்ணிடுறேன்.” "நோ, தேங்க்ஸ் சார், வேலை நிறைய இருக்கு. நான் புறப்பட மணி பத்தாயிடும். எப்படி உழைக்கனும் என்கிறதுக்கு நீங்க முன்னுதாரணமாய் இருக்கீங்க” "குட் நைட் மிஸ்டர். பண்டாரம்.” "குட் நைட் எயார்” பண்டாரம், ஆனந்தக் கூத்தாடினான். மறுநாள், பண்டாரம் அலறியடித்துக் கொண்டும், ஒரு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டும் ஜெனரல் மானேஜர் அறைக்குள் ஒடினான். "சார், கடைசியிலே என்னை பம்பாய்க்கு மாற்றி இருக்கீங்களே.” "டேக் இட் ஈஸி மிஸ்டர். பண்டாரம் மிகத்திறமையான, அதே நேரத்தில் இரவு பகலுன்னு பாராமல், உழைக்கிற இளைஞரை அனுப்பணுமுன்னு இருக்கிறதுனாலே. உங்களையே அனுப்ப வேண்டியதாய்ப் போச்க: “கரேஷ் என்னைவிட திறமைசாலி சார்.” 'இருக்கலாம். ஆனால் உங்களை மாதிரி அவராலே கஷ்டப்பட்டு உழைக்கமுடியாது. நீங்க இரவு பத்துமணிவரைக்கும் வேலை பார்க்கிறதை என் கண்ணால பார்த்திருக்கேனே.”