பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏜfÝ ... &fÝ ... &fÝ ... 53 "சார், சார், பம்பாயிலே வீட்டுப் பிரச்சினை பயங்கரப் பிரச்சனை.” "உங்க சித்தப்பாவுக்குத் தான் ரெண்டு வீடு இருக்கே.” "அது மட்டுமில்ல சார். இந்த ஆவணியில் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சார்." 'நீங்க யங்-மேன். அடுத்த வருஷம் பண்ணிக்கிட்டா குடியா முழுகிடும்" "சார், சார், தயவு செய்யுங்க சார். அப்பாவுக்கு டி.பி. அம்மாவுக்கு ஆஸ்த்மா. சிஸ்டருக்கு வளைக்காப்பு.” "சாக்கு சொல்லணுமுன்னு நினைச்சா ஆயிரம் கிடைக்கும்.” பண்டாரம், மழையில் நனைகிற காக்காய் மாதிரி ஆடினான். ஜெனரல் மானேஜரின் முகத்தில் படர்ந்த உறுதி, அவர், அவன் ஜிகினா வேலைக்கு மசியமாட்டார் என்று தெரிந்தது. மாற்றல் உத்தரவையே வெறித்துப் பார்த்தான். ஜெனரல் மானேஜரோ, ஆயிரம் பண்டாரங்களைச் சாப்பிட்டவர்போல் கன்னத்தை உப்பினார்.பண்டாரம்'எல் போர்டு ஆசாமி ஸ்கூட்டரை ஸ்டார்ட செய்வது மாதிரி, காலைத் தரையில் உதைத்துக் கொண்டே, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் வெளியேறினான். - குமுதம் - 1975 (>