பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர மாடன் 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதியன்று நள்ளிரவில் சுதந்திரம் பிறந்துவிட்டதைக் காட்டும் வகையில் நாடெங்கிலும் உள்ள கவர்க்கடிகாரங்கள் பன்னிரண்டு தடவை மணி அடித்து, டில்லி செங்கோட்டையிலும் பீரங்கிகள் முழங்கியபோது, குட்டாம்பட்டியிலும் பண்ணையார்பரமசிவத்தின் கவர்க்கடிகாரம் பன்னிரண்டு தடவை முழங்கியது. ஊர்ச்சாவடியில் அவர்வைத்திருந்தரேடியோவில்,'ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே! பாடலோசை அலைகளாக காதில் மோதியபோது,விடுதலை வீரர்கள் குதுாகலமாக கூடிக்குலாவி, கிட்டப்பாவின் பாட்டுக்களை எட்டரைக் கட்டையில் பாடிக் கொண்டிருந்தபோது - அதே ஊரில் எட்டடி நீள அகல குடிசை வீட்டுக்குள் மங்கம்மா, பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் பிரசவத்தைக் கவனிக்க குடிமகள் தவிர யாரும் அங்கில்லை. மங்கம்மா, கூரையைப் பார்த்தாள். கண்களில் இருந்து நீரூற்றுபோல் தோன்றிய கண்ணிர் கன்னங்களில் விழுந்து அமங்கலமாக இருந்த கழுத்தை நீர்த்தாவிச் சரடாய் கற்றி மங்களம்' ஆக்கியது. எட்டுமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, வண்டியில் கருப்பட்டியை ஏற்றிக்கொண்டு, கேரளாத்தில் உள்ள புனலூர் சந்தைக்குப் போன அவள் கணவன் - ஏழ மாதங்களுக்கு முன்புவரை, தாலி கட்டிய மனைவிக்கு கையில் மல்லிகைப் பூவோடும், பையில் மிட்டாய்களோடும் திரும்பும் அவள் கணவன், வண்டியில் கிடத்தப்பட்டு, கழுத்தில் ஒரு மாலையுடன் இன்னொருவன்