பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதந்திர மாடன் 55 வண்டியோட்ட, இவன் பிணமாகத் திரும்பினான். காலரா என்றார்கள். காத்துக் கருப்பு என்றார்கள். சொந்தக்காரர்கள், இந்த முண்டயோட ஜாதகம். கழுத்துல இருக்கிற அறுதலி, ரேகையை பார்த்தியளா.. என்றார்கள். இந்திய சுதந்திர தினத்தில் மங்கம்மாவுக்கு, அதே நள்ளிரவில் ஆண்குழந்தை பிறந்ததால், உள்ளூர் கிராம முன்சீப், அவள் பையனுக்கு 'கதந்திரமாடன்' என்று பெயர் வைத்தார். 'போயும் போயும் அந்த அறுதலி மவனுக்கா. இந்த மாதிரி பேரு. ஒமக்கு மூளகிள பிசகிட்டாமச்சான் என்று சிலமைத்துனர்கள்,முனிசிப்பை 'கோட்டி பண்ணினாலும், பயலுக்கு எப்படியோ சுதந்திரமாடன் என்று பெயர், நமது சுதந்திரத்தைப் போல் நிலைத்துவிட்டது. பாரதம், சுதந்திரம் அடைந்ததால், மங்கம்மாவும் ஒரளவு முன்னேறினாள். குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்து, அவன் அப்பனை மாதிரி, அவனும் சொந்தத்தில் ஒருவண்டிவாங்கி புனலூர் சந்தைக்குப் போகாமல், சீவலப்பேரிச் சந்தையில் கருப்பட்டி வியாபாரம் செய்யவேண்டும், என்ற வைராக்கியத்தில், பக்கத்தில் உள்ள சட்டாம்பட்டியில் ஒரு ரெட்டியாரின் பூந்தோட்டத்தில் உள்ள மல்லிகை இருவாட்சி பூக்களை உதிரியாக வாங்கிவந்து வீட்டில் இருந்துகொண்டே மாலையாகத் தொடுத்தாள். குட்டாம்பட்டியின் முடிசூடா மன்னராக விளங்கிய பரமசிவம், அடிக்கடி அந்த ஊரிலும், அடுத்த ஊர்களிலும் விழாக்கள் நடத்தியதால், அவள் மாலைகளுக்கு நல்ல கிராக்கி. அந்தப் பக்கம் வரும் எல்லா அமைச்சர்களுக்கும், மங்கம்மாவிடமே மாலைகள் வாங்குவார்கள், கூட்டங்கள், கோஷ்டிகள். கால்கோள் விழாக்கள், கட்டிடத் திறப்புக்கள் முதலியவை சதா இருந்ததால், மங்கம்மாவின் தொழிலுக்கு மதிப்பு ஏற்பட்டது. நாட்டில் போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களால், கிணறு வெட்டுவதற்கும், மாந்தோட்டம் போடவும், கோழிப் பண்ணை வைக்கவும் கொடுக்கப்பட்ட கடன்களை, வாங்கவேண்டியது, ஒரு