பக்கம்:தரும தீபிகை 3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92.2 த ரும தி பி ைக காட்டு வழியில் காற்றில் அசைக்து கொண்டிருக்த ஒரு சிறு கொடி வளர்ந்து பெரிய மாம் ஆனல் கரிய மதயானையும் தன் அடியில் கட்டும்படி அது திறமாய் கெடிது கிலைத்து கிற்கின்றது; எளிய சிறுவன் ஆயினும் தாழ்வின்றித் தொழிலில் முயன்றுவரின் வலியனய் உயர்ந்து பெரிய அரசனும் தன்னை விரும்பி கிற்கும்படி அவன் விளங்கி கிம்பான் என்க. உள்ளே வயிரம் கொண்டு மாம் கானகவே வளர்த்து உயர் கின்றது; பிறருடைய உதவியின்றிக் தன் முயற்சியிஞலேயே உயர்ந்து வருகின்ற மனிதன் சிறந்த ஆண்மையாளனுய் உலகம் வியத்து நோக்க கிற்கின்ருன். வளர்ச்சியும் உயர்ச்சியும் புறத்தில் இல்லை; உன் உள்ளத்திலேயே உறைந்துள்ளன; ஊக்கி முயன்று உயர்த்த ஆக்கங்கள் யாவும் அடைந்து கொள்ளுக. எழில் ஆய் விளங்கி என் மது தொழில் மனிதனுக்கு மதிப்பை யும் மகிழ்ச்சியையும்.அளித்து வருதல் கருதி. தொழிலில் மூண்ட பொழுதுதான் ஒருவனுடைய உணர்வு ஒளி மிகப் பெறுகின்றது. உயிர் வாழ்வு கம்பீரமாய்க் கேசன்றுகின்றது. உத்தியோகம் புருட லட்சணம் என்னும் பழமொழியும் இங்கே சிக்கிக்கத் தக்கது. தொழிலே உயிர்க்குத் துணை. உயிரின் கிலேயம் ஆகிய தேகத்தைப் பாதுகாத்து, மனைவி மக்களைப் பேணி மனிதன் இனிது வாழ்த்து வருதற்குசிய வளங் கள் யாவும் தொழிலில் விளைந்து வருதலால் அது உயிர்க்குத் துணை என வந்தது. உழைப்பின் வழியே பிழைப்பின் ஒளி என மகளுல் உயிர் வாழ்விற்கும் கொழிலுக்கும் உள்ள உறவுரிமையை உணர்ந்து கொள்ளலாம். பிறப்பில் இழிக்கவன் ஆயினும் கொழிலைக் கைக் கொண்ட வன் பொருள் வளங்களை அடைந்து கொள்ளுகின்றன்; கொள்ள வே உயர்க்க குலக் கவரும் அவனிடம் கயத்து வந்து னின் து கிற்கின்றனர். மேன்மைகள் யாவும் வினைகளால் மேவுகின்றன. உம்ற குறைகள் யாவும் க்ேகிக் குலம் முதலிய எல்லா மாட் சிகளையும் தொழில் உளவாக்கி அருளுதலால அ.த எழில் எனவும் உயிர்த்துனே எனவும் விழுமிய நிலையில் ஒளி பெற்று கின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/151&oldid=1325905" இலிருந்து மீள்விக்கப்பட்டது