பக்கம்:தரும தீபிகை 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொழி ல். 953 உண்ணுகின்ற உணவுகளால் உயிர்களுள: அவ்வுணவு உழவன் கைகள் பண்ணுகின்ற பயிர்களிலே பரவியுள: ஆதலினல் பாரில் யாரும் எண்ணுகின்ற தொழில்களெல்லாம் எருடையான் தொழில் எதிரே இரவி முன்னே கண்ணுகின்ற ஒளிகளென நாணிஒளி யிழந்தயலே கடந்து போமே. (2) வில்வீரர் வாள் வீரர் வேல்.எடுத்துப் போர் தொடுக்கும் வெற்றி வீரர் மல்வீரர் சொல்விரர் மதிவீரர் கதிவீரர் மதித்து மேலே சொல்வீரர் எல்லாரும் சோராமல் சோறழித்துத் தொடர்ந்து கின்று ஒல்விரர் ஆக்கியிங்த உலகத்தைக் காத்து கிற்போர் உழவரன்றே. (3) கடலோடி மலைஏறிக் கான்கடந்து வான்பறந்து கருதிச் சூழ்ந்து மிடலோடு பொன்பொருளே மிகத்தேடி வங்தவரும் மேவிகின்ற உடலோடும் உயிர்வாழ உழவனருள் உணவின்றேல் உய்தியுண்டோ? அடலோடும் அறத்தோடும் அவனியெலாம் வாழ்வதவன் அருளால் அம்மா! (4) கைத்தொழிலைச் செய்தாலும் கலைஞானம் கற்ருலும் கருதி ஒர்ந்து சித்திரங்கள் புனேங்தாலும் கிரைகடல் போய் வாணிபங்கள் சிறக்கச் செய்து ஒத்தபொருள் பெற்ருலும் உலகமெலாம் ஆண்டாலும் உழவன் கையால் வைத்தபொருள் இல்லேயெனில் வையம் உய்ய வழியுண்டோ வண்மை என்னே! (5) உழவில்ை உலகம் கிலை பெற்று வருகலை இக் கவிகள் உணர் த்தியுள்ளன. பொருளின் தயங்களையும் உண்மைகளையும் ஊன்றி உணர்ந்து உரிமைகளை ஒர்த்து கொள்ள வேண்டும். நல்ல தொழிலே காடிச் செய்க. - 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/182&oldid=1325936" இலிருந்து மீள்விக்கப்பட்டது