பக்கம்:தரும தீபிகை 3.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1110 தரு மதீபிகை. விரும்பி அயலூருக் கொண்டு போஞர். இடை வழியில் ஒரு காளைமாட்டுடன் ஒருவர் எதிர்ப்பட்டார். அவர் சைவர்; கம் கையில் கொண்டு வந்தது சண்டிமாடு. அதனை எப்படியும் விற்றுவிட வேண்டும் என்று அவர் விழைந்து வந்தார். எதிர்ப் பட்ட இருவரும் எத்தர் ஆதலால் ஒருவரை ஒருவர் வஞ்சிக்க முண்டு விரகோடு பேரம் பேச நேர்ந்தனர். சைவர். இந்தப் பசுவை எங்கே கொண்டு போகிறீர்கள்? விஜலக் குக் கொடுப்பதா? என்ன விலை? பால் எ வ்வளவு இருக்கும்: வைணவர்: இது லட்சுமி, வீட்டில் இருந்தாலே போதும். சைவர்: அதுசரி, பால் எவ்வளவு கறக்கும்? வைணவர்: காலையில் ஒரு குடம் கோவிந்தா! மத்தியானம் ஆகு குடம் கோவிக்கா மாலையில் ஒரு குடம் கோவிந்தா! இதைக் கேட்டதும் சைவருக்கு ஆசை அதிகமாயிற்று.எப் படியாவது இதைத் தட்டிக்கொண்டு போப்விட வேண்டும் என்று ஆவல் மூண்டது. திருமால் அடிக்கே பெருமால் கொண் டவர்; விண் வார்த்தை பேசாமல் மொழிக்கு மொழி தெய்வ காமத்தைச்சொல்லுகிருர் என மதிப்பு மிகுந்தது, கையில் பணம் இல்லாமையால் தன் காளையைக் கொடுத்துப் பசுவை வாங்கிக் கொள்ளத் துணிந்தார். உள்ளத்துணிவை உரையில் குறிப்பித் தார். மாடு எப்படி? என்று அவர் விசாரித்தர். பாலேக் குறி த்து இவர் கேட்டது போலவே வேலையைப் பற்றி அவர் கேட் டார். இவர் சொன்னுர்: “வண்டியில்ே பூட்டினுலும் சிவ சிவா, கமலையிலே பாட்டினுலும் சிவ சிவா, உழவிலே கட்டிலுைம் வெ சிவா! ' என இவரும் அவர் மாதிரியே சாதுரியமாய்ப் பதில் கூறினர். இருவரும் பண்டமாற்றுச் செய்து கொண்டனர். சண்டிமாட்டைக் கொடுத்து நல்ல பால்ப் பசுவைக் கொண் டோம் என்று சைவர் உவந்துபோளுர். ஊர்போப்ச் சேர்ந்த தும் ஆவலோடு பால் கறக்க நேர்ந்தார்; அது இங்கி உதைத்தது; கலசம் உடைந்தது; காலையில் ஒரு குடம் கோவிந்தா! என்றதற்கு அப்பொழுதுதான் பொருள் தெரிக்கது. பொல்லாத பசுவைக் கொடுத்து நல்ல காளைமாட்டை வாங் கிக்கொண்டேம் என்று உள்ளம்உவந்துபோன அவர் காளையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/339&oldid=1326100" இலிருந்து மீள்விக்கப்பட்டது