பக்கம்:தரும தீபிகை 3.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1130 த ரும தீபிகை. என்றது. நாகரிக வாழ்வின் நீர்மையை ஒர்ந்து கொள்ள வந்தது. காழ்ங்காரை உயர்த்திச் சூழ்ந்தாரை ஆகரித்து பாண்டும் உயர்ந்த எண்ணங்களோடு வர்ழ்ந்து வருகின்றவனே உண்மை யான சிறந்த நாகரிகன் ஆகின்றன். ஒத்த மனிதர்கள் உள்ளம் உவந்து கொள்ள எத்திறத்தும் இனிய நீரனுப்க் சித்த சுத்தி யுடன் ஒழுகி வருவது உத்தம நாகரிகமாம், அத்தகைய சன சமுதாயம் உள்ள நாடு உயர்நலமுடையதாப் ஒளிபெற்று விளங் கும். இனிய தன்மைகள் வளர அரிய நன்மைகள் வருகின்றன. இற்றைக்கு ஆயிர த்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் செங்கண்மா என்னும் ஊரில் ஒரு குறு நில மன்னன் இருக்கான். அவனுடைய உறவினர் உயர்ந்த நாகரிகமுடையராப்க் திருக்தி யிருந்தனர் என்று பெருங்கெளசிகனர் என்னும் சங்கப் புலவர் உவகது பாடியுளளாா. 'கல்லோர் குழிஇய காவில் அவையத்து வல்லார் ஆயினும் புறமறைத்துச் சென்ருேரைக் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கம்.' (tožbo ாடுகடாம்) அக்கச் சிற்றரசனிடமிருந்த கல்விமான்களின் பெருந்தகை மையை இது காட்டியுள்ளது. பரிசில்கருதிவந்த புலவர்கள் காம் கற்றவற்றைத் தெளிவாகச் சொல்ல மாட்டாமல் தியங்கி கின்ரு லும் அவற்றைத் திருக்கமாகச் சுட்டிக் காட்டிச் சிறந்த உதவி புரிந்து உவந்து பேணுவர் என்னும் இது அவரது உள்ளப் பண் பையும் உபரிய நாகரிகத்தையும் உணர்த்தி நிற்கிறது. "ஆறு உட்பகை செற்று அருங்கலே ஒர்ந்து பாரில் கீர்த்தி படைத்தோர் வைகுதல் நல்லவை: அடக்கம் வாய்மை நடுகிலே சொல்லு நன்மை யுடையோர் தொகைஇ வல்லார் மொழியினும் வல்லுநர் ஆக்கிக் கேட்போர் உறையவை நிறை அவையாகும்.' (இலக்கண விளக்கம்) இதில் குறித்துள்ள மக்களுடைய பண் பாடுகளைக் கண்டு மகிழ்கின்ருேம்.ெ பரியநீர்மைகள் பேரின் பங்களை அருளுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/359&oldid=1326120" இலிருந்து மீள்விக்கப்பட்டது