பக்கம்:தரும தீபிகை 3.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1142 தரும தி பி ைக. றனர்; உள்ளே இயலும் செயலும் இழிந்து மயலாப் மருண்டு நிற்கின்றனர் என்க. மனிதனைப் பிணித்திருக்கும் ஆசைகள் பல. எங் கிலேயிலும் கன்னே உயர்ந்தவனுக உலகம் மதித்துப் புகழ வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் எவ்வழியும் தவித்து அலேகின்றன். அந்த ஆவலில் அவன் படாதபாடுகள் படுகிருன். தன் பெயரை அச்சு எழுத்தில் பார்ப்பதில் அவன் எவ்வளவு இச்சை யுடையனுப் நச்சி நிற்கிருன்! தன்னைப்பற்றி எவரேனும் புகழ்ந்து பேச நேர்ந் கால் அகன நெடு நேரம் விழைந்து நயந்து நுழைந்து கேட்கி முன். மேலும் மேலும் பேசும்படி பலவகையிலும் நயமாகக் தாண்டி முயன்று வேண்டி விரிகிருன்.

    • Talk to a man about himself and he will listen for hours.”

(Disraeli) "ஒரு மனிதனேக் குறித்துச் சிறப்பாகப் பேசு, நெடுநேரம் அதனே அவன் விருப்பமாய்க் கேட்டான்' என டிசரேலி என்னும் ஆங்கில இராச கங் திரி இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். கான் என்பதில் மனிதனுக்கு ஒரு பெரிய ஆனந்தம் பெருகி யிருக்கிறது. தன் உள்ளத்தில் நல்ல ககுதி இல்லாத பொழுது தன்னே வெளியே புகழ்ந்து சொல்லுவன எல்லாம் பழிமொழி களே என்பதை அவன் தெளிவாக உணர்த்து கொள்ளுவதில்லை. ஆசைமயக்கில் அறிவு கிலேகுலைந்து பெரியவெறியனுகி விடுகிருன் அரிய அவாவில் அலைவர். என்றது இழிவான நிலைகளில் இருந்து கொண்டே உயர் வான பெருமைகளை அவாவி அலைகிற அவரது சிறுமை கெரிய வந்தது. வஞ்சக் கபடங்களை நெஞ்சக் குகைக்குள் ஒளித்து வைத்து வெளியே கல்லவர்கள் போல் நடித்துக் கம் கிலேமைக்கு மிஞ்சிய மதிப்புகளை உலகில் அட்ைந்து கொள்ளலாம் என்று விழைந்து திரிவது இழிந்த மடமையாம். தன் உள்ளத்தின் ககுதி அளவே உலகத்தில் ஒருவனுக்கு மதிப்பு உண்டாகிறது. பான்மைக்கு மாருன மேன்மையை எவனும் அடைந்து கொள்ள முடியாது. கள்ளம் புரியக் கருது கின்றவன் எவ்வழியும் எள்ள லடைக்கே இழிகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/371&oldid=1326132" இலிருந்து மீள்விக்கப்பட்டது