பக்கம்:தரும தீபிகை 3.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரி க ம், 11|| சாவாமல் கற்பதே கல்வி, கனப் பிறர் எவாமல் உண்பதே ஊண். (ஒளவையா ) காட்சி விரம் கல்வி ஊண் என்னும் நால்வகை நிலைகளுக் கும் நூல்வகையினு மிக்க மேலான இலக்கணக்கை விளக்கி மனித வாழ்வின் புனித நிலையை இது உணர்த்தியுள்ளது. காட்சி என்றது. மெய்யறிவினை. புறக்கே கோன்றுகின்ற பொய்த் தோற்றங்களில் மயங்கி நில்லாமல் மெய்ப் பொருளைக் தெளிவாக உணர்ந்து கொள்வதே காட்சி என்ற கல்ை அதன் மாட்சி காணலாகும். போரில் நேர்ந்த எதிரிகளை வென்று வரு வதே விரம் என நூல்கள் கூறியுள்ளன. புலன்களை வென்று கொள்வதே விரம் என இது குறித்துள்ளது. வயிற்றை வளர்க் கும் பொருட்டுக் கற்றுவருவது கல்வி அன்று; என்றும் அழி யாக நித்திய முக்தியில் உயிர் நிலைத்திருக்கக் கற்றுக் கொள்வதே கல்வி என இது காட்டியருளியது. பிறர் வசமாப் எவல் செய்து உண்பது ஈனம் ஆதலால் அங்கனமின்றிக் தன் மதிப்போடு கா னே முயன்று மானமுடன் வாழ்வதே வாழ்வாம் என்ருர். மனித சமுதாயத்திற்கு ஒரு புனிதமான ஞான போகனேயை ஒளவை யார் இவ்வாறு செவ்வையாக அருளியுள்ளார். இக்கேச மக்களுடைய வாழ்க்கை முறைகளையும் நாகரிக கிலைகளையும் மறுமை நோக்கங்களையும் பழங்கால நூல்களில் உளங்கூர்ந்து கானுந்தோறும் உவகை மீதார்கின்ருேம். ஒரு கலைவன் பொருள் ஈட்டும் பொருட்டு மறுபுலம் போயி ன்ை. அந்தப் பிரிவை ஆற்ற முடியாமல் அவனுடைய மனேவி பெரிதும் மறுகினுள். அருகிருக்கதோழிஅவளை ஆற்றியருளிள்ை. தேறுதலாக அவள் ஆறுதல் கூறிய உரைகள் சீர்மையோடு நீர்மை சுரந்து தேச கிலேமைகள் கெரிய வங்கன. சுனவாய்ச் சிறுநீரை எப்காதுஎன் றெண்ணிப் "பிணமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாக்கன் கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர் உள்ளம் படர்க்க நெறி. (ஐந்திணை ஐம்பது) நம் தலைவர் பல காடுகளைக்கடந்து அயல் நாடு போயுள்ளார். காட்டு மிருகங்களுள் ஒரு கலைமான் தனது பிணையோடு நீர் பருக வந்தது; அந்தச் சுனையுள் கொஞ்சம்தான் கண்ணிர் இருந் 144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/374&oldid=1326135" இலிருந்து மீள்விக்கப்பட்டது