பக்கம்:தரும தீபிகை 3.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1152 த ரும தி பி ைக. உள்ளத்தில் அன்பு கனிந்தபோது அங்க உயிர் இனிமை சுரங்து இன்ப நிலையமாப் உயர்கிறது; அன்பு இல்லையாயின் அது கொடுமை மண்டிக் துன்பச் சூழலில் தொடர்ந்து உழலு கின்றது. உள்ளத்தில் இனிய அன்பு இல்லாதவர் வெளியே கொடியவர், தியவர், துட்டர், முரடர் எனக் திரிய நேர்கின்ற னர். ஆன்ம நீர்மை குன்றிய பொழுது மேன்மை இழங்து கீழ்மை யுறுகின்றனர். அன்பு மனிதனைப் பண்படுத்தி மகான் ஆக்குகின்றது. அன்பு இயையின் அமுது ஆகும் மனித வாழ்க்கை எவ்வழியும் புனிதமாய் இனிமை சுரந்து கனிமகிமையுறுவது அன்பினுலேயாம் என இது அ றிவு.அத் திய |ள் ளது. அமர நிலையை அருளி வருதலால் அமுதம் என நேர்ந்தது. செவ்வையாய்த் திருந்திய குணநீர்மை பண்பு என வந்தது. இங்கப் பெருக்கன்மையின் நறுமணமாப் அன்பு இனிது அமைக் திருக்கிறது. அன்புடைமை ஆன்ற குடிப்பிறக்கல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. - (குறள்,992) அன்பும் குடிப்பிறப்பும் மருவியுள்ள இடத்தில் பண்புடைமை யைக் காணலாம் என இது காட்டியுள்ளது. பரம்பரையாகவே நல்ல பழக்கங்களைப் பழகி வந்துள்ள உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களிடத்தே கான் அன்பும் பண்பும் அமைந்திருக்கும் என்ற கல்ை அவற்றின் கலைமையும் நிலைமையும் நன்கு தெரிய லாகும். புனித நீர்மைகள் புண்ணியங்களாகின்றன. இனிய குனகலங்கள் அமைந்த அளவு மனிதன் புனிதளுப் உயர்ந்து ஒளி பெறுகிருன். அன்பு பண்பின் சாரமா புள்ளது; அதனே இயல்பாகவுடையவன் தெய்வ நிலையை எளிதாக அடை கிருன். உருகிய அன்பின் சுவையாப் இறைவன் உறைகிருன். 'அன்பினில் விளைந்த ஆரமுதே' (திருவாசகம்) ಶTsörä கடவுளே நோக்கி மாணிக்கவாசகர் இவ்வாறு உருகிக் கூவி ஒலமிட்டிருக்கிருர். உள்ளத்தில் அன்பு கனிந்த அளவு அங்கே இன்ப மயமான பரமன் ஒளிசெய்து உலாவுகிருன் என் பகை இக்க அனுபவ மொழியால் இனிது அறிந்து கொள்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/381&oldid=1326142" இலிருந்து மீள்விக்கப்பட்டது