பக்கம்:தரும தீபிகை 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812 த ரும தீ பி ைக. உபகாரங்கள் செய்து வருவதால் காயம் தாய்மையாய் மேன்மை அடைகின்றது. உள்ளம் கனிய எல்லாம் இனிமை யாகின்றன. மூன்று காணங்களையும் இவ்வாறு செவ்விய கிலைகளில் செலுத்தி வருபவன் எவனே அவன் எனது வாழ்காளைத் திவ்விய மகிமை யாக்கிய தெய்வீக மனிதன் ஆகின் குன். இனிய கீர்மைகள் கெழுமிப் புனித கிலையில் ஒழுகி வருபவர் மனித சமுதாயத்துள் மருவி யிருப்பினும் அவர் தனியே ஒளி மிகுந்துள்ளனர். அவருடைய எண்ணம் செயல்கள் யாஅம் புண் னிய மணம் வீசி யாண்டும் கண்ணியம் கனிந்து திகழ்கினறன. 'உடுப்பது சீலம், உணவு வீட்டு அமுதம்; உவப்பது ஞானமா மடந்தை; கொடுப்பதும் அருளேக் கொள்வதும் அறத்தை; இருப்பதும அருங்தவக் குகையாம்: விடுப்பது குற்றம்; தொடுப்பது சாங்தம்: வெல்வதும் தம்மை; மெய்க் குரவன் அடித்தல மலரே முடிப்பது பிறப்பை அறுப்பவர்க் கருக்தொழில இவையே. (மெய்மொழி, தமது வாழ்நாளில் பிறவியை நீக்க முயலும் பெரியோரு டைய இயல்புகளே இது குறித்துள்ளது. பிறவி எவ்வழியும் தான பங்களையுடையது ஆகலால் அது மீண்டும் கோதபடி செய்து கொள்வதே உயிர்க்கு உண்மையான தன்மை செய்த படியாம். பெற்ற உடம்பும் உம்ற ஆயுளும் பெரும் பயன அடைய அரியன. எதை அடையின் என்றும் குன் ருத இன் பாலம் கிடைக் குமோ அதை அடைவதே அறிவுடைமையாம். அரிய பெரிய சாதனங்கள் கையில் அமைத்திருக்கும் பொழுதே உரிய பலனைப் பருவமுடன் கருதிப் பெருமல் இருப்பது பரிபவமாய் முடியும் ஆதலால் கடிதில் ஆய்ந்து கதி கலம் காண்பது மதி கலமாகும். உனக்கு உரிமையாய் வாய்த்துள்ள வாழ்காளைக் கொண்டு உயிர்க்கு உறுதியை விரைவாகச் செய்து கொள்ளுக, அங்கனம் கொள்ளின் அது பிறவிப்பயனைப் பெற்ற பெரிய இன் பப்பேரும். வாழ்நாளே வாழ்காளாச் செய்க வழுவினே பாழ்நாள் உயிர் ககுப் பழி. இதனே உள்ளம் கொண்டு உண்மை தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/41&oldid=1325795" இலிருந்து மீள்விக்கப்பட்டது