பக்கம்:தரும தீபிகை 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி T 305

  • - * = 1.

உலக மக்கள் பலவகை நிலைகளில் படிந்துள்ளனர். செல் வம் கல்வி அறிவு ஆற்றல் உழைப்பு பிழைப்பு முதலிய பல்வேற். வகைகளில் பாகுபாடுகளை யடைந்திருக்கின்றனர். எல்லாகம் சுக சீவிகளாப் வாழவே யாண்டும் மூண்டு முயன்று நீண்டு வருகின்றனர். அத்தகைய மனித சமுதாயம் இனிது வாழ்ந்து வர நாடுகள் தோறும் தலைவர்கள் அமைந்துள்ளனர். அவருள். அரசர்கள் உயர்நிலையாளராப் ஒளி மிகுந்து நிற்கின்றனர். தேச காரியங்களைச் செவ்வையாப் நடக்தி வரும்படி பல துறைகளி லும் தக்கவர்களை அவர் நியமிக்கின்றனர். அந்த நியமனங்களைப் பெற்றவர்கள் அதிகாரிகள் என நிலவி நிற்கின்றனர். அரசுக்கும் நாட்டுக்கும் உறுதியாய் நின்று எவ்வழியும் நெறி முறை கவருமல் உண்மையோடு உழைத்து வருவதாக அரச மன்றில் சத்தியம் செய்து தங்கே கங்களுடைய பதவிகளை யாவரும் பெற்று வருகின்றனர். விசுவாசப் பிரமாணம் என்னும் சொல் அவருடைய சுவாசத்தில் எப்பொழுதும் ஒடிக் கொண்டி ருக்க வேண்டும் என்றே அதனே நாடிச் செய்கின்றனர். அங் நாட்டமெல்லாம் நாட்டின் நலம் கருதியே கூட்டப்பட்டுள்ளன. இந்தக் குறிக் கோளைக் குறிக் கொண்டு கூர்ந்து ஒர்ந்து ஒழுகி வருகின்றவரே கம் கடமையை உண்மையாச் செய்தவராகிரு.ர். தன் கடமைய்ைக் கருதிச் செய்தவன் உயர்ந்து திகழ்கின் முன். அங்ங்னம் செய்யாதவன் இழிந்து படுகின்ருன். தமது நிலைமை உரிமைகளை உணராதவரே நெறி கேடராப் இழிந்து விழ்கின்ருர். உரிய உணர்வு ஒழிந்த பொழுது பெரிய இழிவுகள் பெருகி வருகின்றன. உனர்ந்தவன் உயர்கின்ருன்; அயர்ந்தவன் அழிகின்ருன். -- உன்னே உயர்ந்தவசை செய்து வைத்தது என்ன பயனே எதிர்நோக்கி? ஒவ்வொரு அதிகாரியும் நாளும் எண்ணி யுனா வேனடிய உண்மை வாசகமாய் ஈண்டு இது உருவாகி வந்துள்ள்து. தன் ன்ேயும் தனது பதவியையும் கருதியுணர்ந்து நெறிமுறையே ஒழுகி வருவது விழுமிய சீலமாய் ஒளிமிகப் பெறுகின்றது. எல்லாரையும்போல் இருந்து கொலையாமல் உன்னை உயர்ந்த -o-o: பதவியில் ஒர் சிறந்த அதிகாரியாக ஆக்கி வைத்துள்ள அந்தப் 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/150&oldid=1326303" இலிருந்து மீள்விக்கப்பட்டது