பக்கம்:தரும தீபிகை 4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1306 த ரும தீ பி. கை பாக்கியத்தை நினைந்து பணிகள் புரிக என உணர்வு கூறியது அவன் உண்மையை நோக்கி ஒழுகி உயர. விதிமுறை கெரிந்து வினை புரியாகவன் மதி கேடஞயிழி வுறுகின்ருன். தகுதியில்லாதவர்க்கும் அதிகார பதவிகள் சில வழிகளில் கிடைத்து விடுகின்றன. அகனல் காட்டுக்கு இன்ன அம் இடையூறுகளும் கேருகின்றன. மன்னர் திருவும் மகளிர் எழில்நலமும் துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா---துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம் உழைதங்கட் சென்ருர்க்கு ஒருங்கு. (நாலடியார், 167) பதவியை வகிக்கும் தகுதியில்லாதவரும் அரசாங்க நிலை களில் உயர்ந்த மந்திரிகளாய்ச் சிறந்த அதிகாரிகளாப் வந்துள் ளதைக் கண்டு அறிஞர் பலர் அதிசயமடைந்து வியந்து நின்ற னர். அதுபொழுது அவரை நோக்கி ஒரு கவிஞர் இவ்வாறு கூறியருளினர். அனுபவக் காட்சிகள் இனிய சுவைகளை ஊட்டி வருகின்றன. கவியின் பொருள் நிலைகள் கருதி புனர வுரியன. தகுதியில்லாதவர்க்கும் கக்க வாய்ப்புகள் கால வேற்றுமையால் அமைந்து கொள்ளுகின்றன. அவற்ருல் அவர் நிமிர்ந்து திரி கின்றனர். கிலேமையை மறந்து கலைமையில் களிக்கின்றனர். அரிய அரச செல்வமும், அழகிய மகளிர் இன்பமும் அவ ரோடு நெருங்கிப் பழகினவர் எவராயினும் அவருக்கு எளிதே கிடைத்து விடுகின்றன, அவற்றை அடைதற்குக் ககுதி வேண் டா, குளிர்ந்த மர நிழல் கன்பால் ஒதுங்கினவர்க்கெல்லாம் இனிய நிழலைக் கொடுத்தருளுகிறது; அதுபோல் அவை அமை ங்து கிற்கின்றன என்னும் இது விநயமான வித்தக வசனமாய் வந்துள்ளது. உள்ளக் கருத்து உய்த் துணரத் தக்கது. கவியின் றிப்பு உணர்வின் சுவை தோய்ந்து உவகை மணம் கமழ்ந் துள்ளது. புலமைக் காட்சி தலைமை மாட்சியாய்த் தழைத்து வருகி ه التي لالم தகுதியை உணர்ந்து வினையாளர்களை நியமிக்கவில்லையாளுல் அந்த அரசன் பகுத்தறிவு அற்ற மரம் போல் இழிக்கப்படுவான் என்பது இதில் தெளிக்கப் பட்டது. குறிப்பு மொழிகள் கூரிய சீரிய உண்மைகளை வெளிப்படுத்தியருளுகின்றன. குடி சனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/151&oldid=1326304" இலிருந்து மீள்விக்கப்பட்டது