பக்கம்:தரும தீபிகை 4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளுவது என்னும் காரணக் குறியா ப் இப் பேர் அமைக் துள்ளது. மொழிகள் பொருள்களை விளக்கி வருவது ஒளி சிறந்து தெளிவு மிகுந்து திகழ்கின்றது. படித்தலால் அறிவு சுரந்து வருகிறது; படியாமையால் அது கரந்து கிற்கிறது. உள்ளம் படிய உணர்வு பெருகுகிறது. படித்த படிப்புக்குப் பயன் எடுக்க பிறவியைப் புனித மாக்கி அடுத்த பிறவியை அடையாதபடி செய்தலேயாம். அடைய வேண்டியதை அடைந்தவனே யாண்டும் உயர்ந்து எல்லாம் உ டையவளுப் ஒளி மிகுந்து திகழ்கிருன். கான் கற்ற கல்வியை உற்ற பிறவிக்கு உரிமையாக்கிஉய்தி பெற்றவன் உயர்ந்த ஞான சீலகுய்ச் சிறந்து விளங்குகிருன். அங்கனம் செய்யாதவன் இழிந்த பேதையாய்க் கழிந்து படுகி முன். அரிய கல்வியறிவுக்குப் பயன் உரிய வுண்மை நிலையை மருவி மகிழ்கலேயாம். 'கற்றதும் கேட்டதும்தானே ஏதுக் காகக் கடபடம் என்று உருட்டு தற்கோ? கல்லால் எம்மான் குற்றமறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு குணங்குறி பற்று இன்பகிட்டை கூட அன்ருே: (1) கற்பதெல்லாம் கற்றேம்முக் கண்ணுடையாய்! நின் பணியாய் நிற்பதுகற் றன்ருே கிருவிகற்ப மாவதுவே. (2) கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கெனவே சற்றும் தொழில்கற்றுச்சிற்றின்பத்துாடு சுழலின் என்னும்: குற்றம் குறைந்து குணமேலிடும் அன்பர் கூட்டத்தையே முற்றும் துணையென நம்புகண்டாய் சுத்த மூடகெஞ்சே! (3) கற்ருலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி பெற்ருலும் இன்பம் உண்டோ? பேசாய் பராபரமே! (4) (தாயுமானவர்) - * * ** *_ -- - - - ■ -- ■ ■ கல்வி நிலையையும் அதன் பயனே யும் குறித்துத் தாயுமான வர் இங்கனம் உள்ளம் உருகி உரையாடியிருக்கிரு.ர். 65) களில் பொதிந்துள்ள உணர்வு நலங்கள் ஊன்றி ஒர்ந்து சிந்திக்க வுரியன. ஆன்ம போதம் கோ ப்ந்த மகான் களுடைய வாக்குகள் அமிர்த நீர்மைகள் சுரங்துள்ளன. உரிமையோடு பருகினவர் அயர்கள் நீங்கி உயர் இன்பங்கள் பெறுகின்றனர். பெற உரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/200&oldid=1326356" இலிருந்து மீள்விக்கப்பட்டது