பக்கம்:தரும தீபிகை 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. கல்விச் செருக்கு 1357 உயர்வும் காழ்வும் ஒழுக்கத்தாலும் இழுக்கக்காலும் முறையே விளைகின்றன. உள்ளத்தில் இனிய நீர்மைகள் தோய்ந் திருந்தால் அங்க மனிதன் நல்லவன் என உலகத்தில் சொல்லப் படுகின்ருன். நல்ல தன்மைகள் இல்லையாளுல் பொல்லாதவன் என்று எள்ளப்படுகின்ருன். ள்ளத்தின் நீர்மை அளவே எல்லா மேன்மைகளும் ?)_ GYT வாகின்றன. செருக்கு சிறுமையுடையது ஆதலால் அது பெரு மையைக் கெடுத்து விடுகிறது. அரிய பல நன்மைகளுக்கு உரி மையாயுள்ளது மன நலமே. நீசமான செருக்கால் அது மாசு படுகின்றது, படவே ஆன்ம ஒளி பழுங்கி அவலம் அடைகின் றது. உள்ளம் மாசு படாமல் கேசு படப் பேணி வருபவன் ஈசனே நேரே காணுகிருன். அதனை மாசு படுத்தினவன் நாசத் தையே அடை கிருன். எள்ளல் இழிவே எதிர் எழுமால். செருக்கால் விளையும் விளைவுகளே இது உணர்த்தியுள்ளது. தம்மை வியந்து புகழ்தலும் பிறரை இகழ்ந்து பேசுகலும் செருக்குடையவர் இயல்பு ஆதலால் அவர் எங்கும் சிறுமை படைய நேர்கின்ருர், எல்லாம் தெரிந்ததா எண்ணிச் செருக்குவார் பொல்லா தனசொல்லிப் பொங்குவார்-நல்லாரை எள்ளி இகழ்வார் இழிபுல்லர் மேன்மேலும் துள்ளி மிகுப்பர் துயர். இழி செருக்காளர் இங்ங்னம் களி மிகுத்து விளிகின்றனர். அகங்கை அவலமாயப் இழிவ களையே தருதலால் அதனை டையவர் பழி துயரங்களேயடைந்து அழிவுறுகின்றனர். “Pride goeth before destruction.” [Bible] ==

  • - ol LE , - - . -- -- - #
செருக்கு அழிவின் அறிகுறி’ எ ன சாலமன எ னனும

நீதிமான் இவ்வாறு கூறியிருக்கிருர். மமதை மதியைக் கெடுத்து மனிதனுக்கு மரண துன்பத்தை விளைக்கின்றது. தி கல்வி எவ்வழியும் அறிவும் அமைதியும் கருவது, அது உள் ளம் தீய பொல்லாதவர்.பால் சேர்ந்தால் அகந்தையாய் விரிந்து அல்லல் புரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/204&oldid=1326361" இலிருந்து மீள்விக்கப்பட்டது