பக்கம்:தரும தீபிகை 4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L358 த ரு ம தீ பி ைக "வல்லவர்பால் கல்வி மதம்ஆணவம் போக்கும்; அல்லவர்டால் கல்வி அவையாக்கும்-நல்லிடத்தில் யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் போகம் பயில்வார் புரிந்து.” (நீதி சாரம்) கல்விச் செருக்கு யார்பால் உண்டாம் என்பதை இது காட்டி யுளது. நல்லவர் நீர்மையும் அல்லவர் கீழ்மையும் அறிய வந்தன. அரிய பல கலைகளைக் கற்றுப் பெரிய மேதைகளாயினும் மேலோர் அடங்கியே யிருக்கின்றனர். அனுமான் அதிசய மேதை. அவன் கல்லாக களைகள் யாண்டும் இல்லை, அத்தகைய உத்தமக் கலைஞன் எக்ககைய கிலேகளிலும் அடக்கமும் பணிவு முடையயிைருந்து வந்துள்ளான். செருக்கு இல்லாமல் இருத்தலே மேலோரது நீர்மையாம். 'பெருமை பெருமித மின்மை; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.’ (குறள், 979) பெரியாரது தன்மையையும், சிறியாரது புன்மையையும் இது ஒருங்கே உரைத்துள்ளது. பெருமிகம் = செருக்கு. கல்வி செல்வம் முதலிய வளங்கள் எவ்வளவு கிறைந்திருக்காலும் பெரி யோர் செருக்கின்றி அடங்கியிருப்பர். யாகொன்றும் இல்லையா யினும் சிறியோர் கருக்கித் திரிவர் என்றகளுல் அவரது புலையும் புன்மையும் நிலையும் அறிய வந்தன. “சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.” (முதுமொழிக் காஞ்சி) ஒருவன் இழி குடிப் பிறப்பினன் எ ன்பதை அவனது கழி செருக்கால் அறியலாம் எனக் கூடலூர்க்கிழார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியுள்ளார். உள்ளக் கருக்கின் பிறப்பிடத் தைக் குறித்துள்ள து கூர்ந்து சிங்திக்கவுரியது. சிறுமையும் பெரு மையும் செயல் இயல்களால் தெரிய வருகின்றன. 'பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.' (குறள், 9 78) அமைதியாய்ப் பணிந்து ஒழுகுவது பெரியார் இயல்பு; தன்னே வியந்து கருக்கிக் திரிவது சிறியார் நிலை என இரு வகை யாரையும் ஒரு தொகையாக இது உணர்த்தியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/205&oldid=1326362" இலிருந்து மீள்விக்கப்பட்டது