பக்கம்:தரும தீபிகை 4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1362 த ரும தீ பி. கை பெருந்தன்மையான நல்ல குலமக்களிடம் செல்வம் வந்து சேர்க்கால் அவர் சிறந்த குண நீர்மைகளோடு உயர்ந்து விளங்கி எல்லார்க்கும் இனிய ராப் இதம் புரிந்து வருகின்றனர். புல்லரிடம் பொருள் புகின் எல்லா வகையிலும் தம்மை உயர்ந்தவராக எண்ணி இறுமாந்து பொல்லாச் செருக்கராப்ப் பொங்கித் திரிகின்றனர். சேர்க்க இனத்தின் சிறுமையால் அரிய செல்வமும் அவலமடைய நேர்ந்தது. பாத்திர பேதங்களால் பழி துயரங்கள் விளைந்தன. -- பாலேயே ஊட்டினும் பாம்பு விடம்காட்டும்; மாலேயே சூட்டினும் மாயப்பேய்-மூலையாய்ப் பொல்லாங்கே செய்யுமால் புல்லர் பொருள்பெறினும் பொல்லாங்கே செய்வர் புகுந்து. பாலும் மாலையும் அகமும் புறமும் அறிய வந்தன. பொருள் கல்வியையும் குறித்தது. பால் போல் நல்ல கல்வி உள்ளே சுரங் திருந்தாலும் வளமான செல்வம் வெளியே நிறைந்திருந்தாலும் புல்லர் உள்ளம் திருக்தி நல்லது செய்யார், எள்ளிச் செருக்கி அல்லலே செய்வார் என்க. பாம்பும் பேயும் தீம்பும் கொடுமை யும் கெரிய நின்றன. செருக்கு மனிதனைப் பேயனுக்கித் திய ளுக்கிச் சிறுமைப் படுத்தும் ஆதலால் அதனை ஒருவி நின்றவர் பெருமை பெறுகின்றனர். செல்வம் நல்லவர்பால் சேர்ந்தால் புகழும் இன்பமும் புண்ணியமும் தருகின்றன. தியவர்.பால் சேர்ந்தால் பழியும் அதுன்பமும் பாவமும் புரிகின்றன. H புல்லரிடம் செல்வம் புகுந்தால் உள்ளக் களிப்பு எல்லை மீறி எழுகின்றது; எழவே அறிவு பாழ்போப் அவகேடுகளைச் செய்கின்ருர்; அதனுல் இருமையும் இழந்து இழிவுறுகின்றனர். 'கல்லார்கட் பட்ட வறுமையின் இன்னுதே கல்லார்கட் பட்ட திரு.” (குறள், 408) கல்ல்ாப் புல்லர் கையில் செல்வம் வரின் அவர் களிப்பு மீதுார்ந்து அடியோடு கெடுவர் எனத் தேவர் இங்கனம் பரிதாப மாய்க் கூறியிருக்கின்ருர். கல்லார் வறுமையுறினும் இனியராப் நலம் பல பெறுவர். கல்லார் செல்வம் பெறினும் கொடியராய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/209&oldid=1326367" இலிருந்து மீள்விக்கப்பட்டது