பக்கம்:தரும தீபிகை 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1363 கேடே அடைவர் என்ற தல்ை அவரது மடமையும் கொடுமை யும் அறியலாகும். 'அறிவிலாத அற்ப ரானவர்க்குச் செல்வம் அல்லது பகைவேறு உண்டோ? (திருவிளையாடல்) அறிவு கெட்ட புல்லருக்கு வேறு பகை வேண்டியதில்லை; செல்வமே அவர்க்குக் கொடிய பகை எனப் பரஞ்சோதி முனி வர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். பழி பாவங்களைச் செய்து கொடிய நரக துன்பங்களை விளைத்துக் கொள்ளுவர் ஆதலால் அற்பர்க்குச் செல்வம் அழிபகை ஆயது. அற்பனய் இழிந்து அழியாதே; தகுந்த குண நீர்மைகளைப் பேணிச் சிறந்த பெருந்தகையாளய்ை உயர்ந்து வாழுக. 592. செல்வம் ஒருவன்பால் சேர்ந்தக்கால் அப்பொழுதே பொல்லாத நான்கும் பொருந்துமே-கல்லாத மூடம் உலோபம் முரண்செருக் கம்மம்மா பீடையெவர் உய்வார் பிழைத்து. )ع( இ-ள் ஒருவனிடம் செல்வம் சேர்ந்தால் அப்பொழுதே அவனி டம் மூடம் உலோபம் முர ண் செருக்கு ஆகிய பொல்லாத புன் மைகள் கூடவே வந்து சேர்கின்றன; அந்தப் பீடைகளிலிருந்து அவன் கப்பி உய்வது அரிது என்பதாம். ஆக்கம், வளம், வாழ்வு, பாக்கியம், திரு, பொருள் என வரும் பெயர்களால் செல்வத்தின் உயர் நிலைகளை உணர்ந்து கொள்ளுகிருேம். இத்தகைய செல்வம் தனக்கு உரிமையாகப் பெருகி வரும் பொழுது மனிதன் உள்ளத்தில் பெருங் களிப்பு ஒருங்கே உயர்ந்து எழுகின்றது. எல்லா இன்பது கர்ச்சிகளுக்கும் எதுவாயுள்ளமையால் பொருளைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி கொண்டு எவரும் உள்ளம் பூரித்து உவந்து நிற்கின்றனர். செல்வம் புலனே புணர்வு விளையாட்டுஎன்று அல்லல் நீக்க உவகை நான்கே.” (தொல்காப்பியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/210&oldid=1326369" இலிருந்து மீள்விக்கப்பட்டது