பக்கம்:தரும தீபிகை 4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1367 விரன் எப்பொழுதும் போர்க்கொழிலை புடையவன்; தன் உயிரையும் மதியாமல் போர்மேல் மூண்டு செல்பவன், அவனைச் சேர்ந்தால் ஆபத்து என்று விலகினுள்; தன்னிடம் உள்ள பொருள்களை யெல்லாம் வள்ளல் வாரிக் கொடுக்கின்றவன் ஆக லால் அவனே மீண்டும் அணுக நாணினுள்; கல்வியே கற்புடைப் பேண்டிர் என்றபடி ஒரு பத்தினியை முன்னதாகவே பெற்றி ருத்தலால் புலவனே நெருங்காமல் நீங்கினுள்; புல்லிய உலோபி யிடம்தான் செல்லமா நிலைத்து வாழலாம் என்று கருதி அங்கே போப் இலக்குமி அமர்ந்து கொண்டாள் எனக் கவி புனைந்து கூறியுள்ளது கினேந்து சிக்திக்கவுரியது. விரம் கொடை கல்வி முதலிய உயர்ந்த நீர்மைகள் யாதும் இல்லாத இழிக்க பேதைப் புல்லர்களிடமே செல்வம் பெருகி நிற்கும் என்பது தெரிய வந்தது. நல்ல அறிவாளிகள் செல்வத்தின் இயல்பையும் நிலையையும் நன்கு அறிந்து கொள்ளுகின்றனர். கொள்ளவே அதனை இனிய வழிகளில் பயன்படுத்திப் புகழ் புண்ணியங்களை எய்துகின்றனர். தெளிவான உணர்வு கலம் இல்லாமையால் தங்களிடம் சேர்ந்துள்ள பொருளைப் பெரிதாக எண்ணி மருள்கொண்டு மயங்கிச் செருக்கிப் பிலுக்கிச் சிலுகு புரிந்து உழலுகின்றனர். பித்தோடு கள்ளுண்ட பேய்க்குரங்கு தேட்கடுப்பும் ஒத்தேறின் உள்ள வுறுதிபோல்-தத்திநிற்கும் பேதைச் சிறுவர் பெரும்பொருள்கை யுற்றக்கால் வாதை புரிவர் வலிந்து. ஒரு துட்டக் குரங்கு; கொஞ்சம் பைத்தியம்; புளித்த கள்ளையும் குடித்திருந்தது; பேயும் பிடித்துக் கொண்டது; தேளும் கொட்டி விட்டது; இந்த கிலேயிலுள்ள அந்தக் குரங்கைப் போல் பேதைச் சிறியர் செல்வம் பெற்ருல் களிப்பு மீதுார்ந்து சேட்டைகள் செய்வர் என இது உணர்த்தியுள்ளது. செல்வச் செருக்கு எ ள்ளலாயப் அல்லலே விளைக்கும்; அந்தப் புன்மை படியாமல் பெருந்தன்மையுடன் நன்மை படிந்து ஒழுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/214&oldid=1326373" இலிருந்து மீள்விக்கப்பட்டது