பக்கம்:தரும தீபிகை 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1376 த ரும தீ பி. கை 596. மடமை இருளில் மனச்செருக் கென்னும் கெடியபேய் கின்று நிமிர்ந்து-கொடிய பழியுரைகள் ஆடியே பல்லுயிரும் அஞ்ச அழிதுயர்கள் செய்யும் அடர்ந்து. (சு) இ-ன் மனச் செருக்கு என்னும் நெடிய பேப் மடமை யிருளில் கலை நிமிர்ந்து திரிந்து பலரையும் இகழ்ந்து பழிமொழிகள் ஆடி எவரும அளுச அழி துயர்கள் செய்யும் என்பதாம். அறிவு இனிய ஒளியாய் நின்று அரிய பல உறுதி கலங்களை மனிதனுக்கு அருளி வருகின்றது. அந்த ஒளி குறைந்த அளவு இருள் சூழ்ந்து கொள்கின்றது. அது சூழவே மருள்கள் பல மண்டி மனித வாழ்வு பாழ்படுகின்றது. அறிய வேண்டியதை அறியாமல் இருப்பது அறியாமை யாப் முடிகின்றது. அதனுல் கொடிய அவலங்கள் விளைகின்றன. LI) | __ êT) LI}5Ø !L! இருள் என்றது உண்மை நெறிகளையுணர ாமல் புன்மை படிந்து உழலும் அதன் புலே திலே கருதி. அஞ் ஞானம் மூடம் அறிவின்மை பேதைமை என்பன எல்லாம் ஆன்ம வுளி மைகளை இழந்து கிற்கும் இழிவுகளை விளக்கி நிற்கின்றன. உணர்வின் அளவே உயர்வு விளைந்து வருகிறது. குன நீர்மைகளால் மனிதன் மகிமை பெற்று வருகிருன். மனச் செருக்கு குணக்கேடு ஆதலால் அதனை யுடையவன் இழிக்கப் படுகிருன். இழிவும் உயர்வும் வெளியிலிருந்து வருவன வல்ல. மனிதனுடைய செயல் இயல்களால் அவை மருவி நிற்கின்றன. நல்ல தன்மையால் எல்லா நன்மைகளுமாகின்றன. பண்பு படிந்த மனிதன் யாண்டும் இன்ப நிலையமாய் உயர்ந்து வருகிருன். அது படியாதவன் துன்ப நிலையமாய் இழிந்து நிற்கிருன். எவ்வளவு செல்வங்கள் எய்தி யிருந்தாலும் மேலோர் அமைதியாகவே அடங்கி யிருப்பர். சிறிது கிடைத்தாலும் கீழோர் செருக்கு மீதுளர்ந்து வினே பிலுக்கி நிற்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/223&oldid=1326384" இலிருந்து மீள்விக்கப்பட்டது