பக்கம்:தரும தீபிகை 4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1379 தெளிவான விடைகள் எளிதில் கிடையா. மனிதனுடைய எண் னங்களும் செயல்களும் நல்லனவாயின் நன்மை; தியனவாயின் தீமை ஆம். நன்மையால் புகழும் இன்பமும் உளவாகின்றன. தீமையால் பழியும் துன்பமும் வருகின்றன. * தான் சுகமாயிருக்க விரும்புகின்றவன் எவ்வழியும் நல்ல தையே செய்ய வேண்டியவனுகின்ருன். அவ்வாறு செய்யான யின் அல்லல் அடைய நேர்கின்ருன். கரும காரணங்களின் மரு மங்கள் கருதியுணர வுரியன. கான் விதைக்க விளைவின் பலனை யே எவனும் அனுபவித்து வருகிருன். வினையின் விளைவுகள் நினை வரு நிலையில் நேரே வருகின்றன. ஒருவன் உள்ளத்தில் செருக்கு அடைந்தால் கள்ளைக் குடித்த குரங்கு போல் அம் மனம் துள்ளித் துடித்துத் துடுக்கு கள் மிகச் செய்கின்றது. களி வெறி அதிகமானுல் உயிர்போன சவம் போல் உணர்ச்சியின்றி யுள்ளது. நெடிய செருக்கால் நெஞ்சம் திமிர் கொண்டபோது அந்த மனிதன் யாரையும் மதி யாமல் உன்மத்தனப் இருக்கிருன். அண்ணலங் திருவிடை அழுந்தி யாரையும் எண்ணலன் செந்நெறி இயற்ற ஒர்கலன் கண்ணிலன் மதியிலன் களிப்பின் ஒர்மகன் மண்ணிடை விரைவொடு வழிக் கொண்டாலென. (கந்த புராணம்) விழிதெரிந் திருக்கவும் குருடு மேவுவர்; மொழிதெரிந் திருக்கவும் மூகள் ஆகுவர்; பொழிமது வன்றியும் மயக்கம் பூணுவர்; அழிதரு காலமாம் அரசர் வண்ணமே. (செவ்வந்திப் புராணம்) சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம்வந் துற்றஞான்றே வறியபுன் செருக்கு மூடி வாயுளார் மூகர் ஆவர்; பறியணி செவியுளாரும் பயிறரு செவிடர் ஆவர்: குறிபெறு கண்ணுளாரும் குருடராய் முடிவர் அன்றே. (குசேலோபாக்கியானம்) நோக்கிருந்தும் அங்ககராக் காதிருந்தும் செவிடரா நோயில்லாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/226&oldid=1326388" இலிருந்து மீள்விக்கப்பட்டது