பக்கம்:தரும தீபிகை 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1380 த ரும தீ பி ைக வாக்கிருந்தும் மூகையரா மதியிருந்தும் இல்லாரா வளரும் கைகால் போக்கிருந்தும் முடவரா உயிரிருந்தும் இல்லாத பூட்சி யாரா , ஆக்குமிங்கத் தன மகனே ஆக்கமென நினைத்தனை நீ அகக் குரங்கே.” (நீதிநூல்) செல்வச் செருக்கு அகத்தில் எறிய பொழுது அக்க trgof கர் புறத்தில் இருக்கும் நிலைகளை இவை உணர்த்தி நிற்கின்றன. மனக் களிப்பு முற்றி மதிகெட்டு மகோன்மத்தா யிருக்க லால் செல்வச் செருக்கர் பல் வழிகளிலும் இழிந்து பழியடை கின்றனர். அவரை அணுகினவரும் அவல்முறுகின்றனர். காவலர் புகழ்சிவ ஞான தேசிக எவ்வம் அகன்ற சைவ நாயக கின்னடிக் கமலம் கெஞ்சுற இருத்தி நறுமலர் துளவி நாடொறும் பரவுஅாஉம் செல்வச் செருக்கிற் செவிடுபட் டிருக்கும் காதில் தீம்பால் கமர் கவிழ்த் தாங்கு பாப்பல பன்முறை பாடி கின்னேப் பாடா மாந்தர் பக்கல் கூடா அடியரில் கூட்டுக எனவே.”

ஞான நாயக! நல்ல ஆவின் பாலைக் கமரில் கவிழ்த்தது போல் செல்வச் செருக்கால் செவிடு பட்டிருக்கும் காதில் சுவை யான இனிய தமிழ்ப் பாக்களை நவையாகச் சொரிகின்ற பாவ லர் பக்கம் நான் சேராமல் அருள் புரிக' எனக் கமது குரு நாதனே நோக்கிச் சிவப்பிரகாச சுவாமிகள் இவ்வாறு வேண்டி யிருக்கிரு.ர்.

செல்வச் செருக்கால் மனிதன் எவ்வளவு இழிந்தவளுப் ஈனமடைந்துழலுகிருன்! என்பது இதல்ை அறிந்து கொளலாம். மருளும் இருளும் மடமையும் அங்கே உருளும் புரளும் ஒருங்கு. m செருக்கு உள்ள இடத்தில் இருக்கும் புன்மைகளை இது குறித்துள்ளது.அகத்தின் விளைவுகள் புறத்தில் வெளியாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/227&oldid=1326389" இலிருந்து மீள்விக்கப்பட்டது