பக்கம்:தரும தீபிகை 4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1382 த ரு ம தி பி ைக அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்ருல் அற்குட ஆங்கே செயல். (குறள், 333) செல்வம் நிலையில்லாத இயல்பினது; அதனைப் பெற்ருல் உடனே நிலையான கருமங்களைச் செய்து கொள்ளுக எனக் தேவர் இவ்வாறு போதித்துள்ளார். 'அம்பொற் கலத்துள் அடுபால் அமர்ந்துண்ணு அரிவை அந்தோ வெம்பிப் பசிநலிய வெவ்வினேயின் வேருயோர் அகல்கை ஏந்திக் கொம்பிற் கொள ஒசிந்து பிச்சை எனக் கூறி நிற்பாட் கண்டும் கம்பன்பின் செல்வம் நமரங்காள்! கல் லறமே கினேமின் கண்டீர்! (சீவக சிந்தாமணி) இனிய சுவை அமுதைப் பொன் கலத்தில் வைத்து உண்டு களித்த அரசியும் கையில் ஒடு எந்திப் பிச்சை எடுக்கும்படி நேர்ந்திருத்தலைப் பார்த்திருக்கிருேம்; ஆதலால் செல்வத்தை நிலை என்று நினையாமல் புண்ணியத்தை எண்ணி உப்தி பெறுங்கள் எனத் திருத்தக்க தேவர் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். "ஒரு நாயகமாய் ஒட உலகுடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானேயர் பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர் திரு.காரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினே.” (திருவாய்மொழி) உலக முழுவதும் எக போக வுரிமையாத் தனிச் செங் கோல் செலுத்தி யாண்டும் நீண்ட புகழுடன் அரசு ஆண்ட முடி மன்னரும் வரிசை குலேந்து கொடிய மிடியராய் யாவரும் காணப் பிச்சை எடுக்க நேர்வர்; ஆதலால் நிலையற்ற செல்வக் தை நம்பி கில்லாமல் இறைவனேச் சிந்தித்து உய்யுங்கள் என நம்மாழ்வார் இங்ங்னம் உப்தி கூறியுள்ளார். "அரையது துகிலே மார்பினது ஆரம் முடியது முருகுகாறும் தொடையல் புடையன பால்வெண் கவரியின் கற்றை மேலது மாலே தாழ்ந்த மணிக்கால் தனிக்குடை முன்னது முரசுமுழங்கு தானே இங்கிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/229&oldid=1326392" இலிருந்து மீள்விக்கப்பட்டது