பக்கம்:தரும தீபிகை 4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் | 38:3 இனேய செல்வத்து ஈங்கிவர் யாரே தேவர் அல்லர் இமைப்பதும் செய்தனர் மாந்தரே என மயக்கம் நீங்கக் களிற்றுமிசை வந்தனர் நெருங்ல் இன்றிவர் † - பசிப்பினி காய்தலின் வணங்கித் துணியுடுத்து மாசுமீப் போர்த்த யாக்கையொடு தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே.” (ஆசிரியமாலை) அரிய பெரிய செல்வ நிலையில் அமரர் போல் இருந்தவரும் வறியராய்ப் பசிப்பிணி வருக்கக் கிழிந்த அழுக்குக் துணியை யுடுத்தி அவலத் துயரில் அலமந்துழக்கனர் என இது உ ணர்த்தி யிருக்கும் நிலையை ஊன்றி நோக்குக. இவ்வாறு கிலேயற்ற செல்வக்கை நினைந்து களித்தல் இளி வாம் ஆதலால் உண்மையைக் கெளிவாக உணர்ந்து உ யர்ந்த நீர்மைகளை மருவிச் சிறந்த சீர்மையுடன் வாழுக. தின அளவேனும் நீ சிந்தனையைச் செய்தால் உனே அளந்து காண்பாய்! மனிதன் கருதி புணர வேண்டிய உறுதி நிலையை இது உணர்த்தியுள்ளது. விண் மண் முதலிய விரிவுகளைக் கண்ணுல் காணுகின்ருப். அந்த அற்புதக் காட்சிகளையெல்லாம் ஆராய்ந்து கான வல்ல நீ யார்? உலக வாழ்வோடு உனக்கு எவ்வளவு தொடர்பு உளது? எதுவும் நிலையில்லாத நிலையில் நிலைத்துள்ள உனது கிலே என்ன? உள் முகமாய் நோக்கிப் பலவும் சிந்தனை செய்து பார் அக்கப் பார்வையில் அதிசய வுண்மைகள் அறிய வரும்; அகனல் அரிய பல நன்மைகள் அடையலாம்.

  • = -

599. உன்.அறிவும் உன்பொருளும் உன்வலியும் உன்கிலேயும் சின்னம் சிறியவெனத் தேராமல்-பென்னம் பெரியவென எண்ணியே பேதாய் செருக்கல் அரிய மடமை அது. (கூ) இ-ள் н பேதையே! உன்னுடைய அறிவும் பொருளும் வலியும் மிக வும் சிறியன, உண்மைகளைக் கருதி உணராமல் பெரிதும் செருக் குதல் கொடிய மடமையாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/230&oldid=1326393" இலிருந்து மீள்விக்கப்பட்டது