பக்கம்:தரும தீபிகை 4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1388 த ரும தீபிகை 600. உலகின் நிலையை ஒருசிறி தோரின் அலகில் அனுபவங்கள் ஆகும்-விலகி விழிமூடி யுள்ளமையால் வினே செருக்கிப் பழிமூடி யுள்ளாய் பரிந்து. (ιδ) இ-ள் உலக நிலையை ஒரு சிறிது கருதி யுனரினும் அரிய பல التي الإلكب பவங்கள் தெளிவாம்; அவ்வாறு கருதி அறியாமல் கண் மூடிக் குருடுபட்டுள்ளமையால் விருகாவாகச் செருக்கிப் பழி ՅԼԲ ւջஇழிந்துள்ளாப் விழி திறந்து உய்க என்பதாம். நேர்ந்துள்ளதை ஒர்ந்து பார் என இது உணர்த்தியுள்ளது. உணர்ச்சியால் உயர்ச்சிகள் உளவாகின்றன. கூர்ந்து பார்த்து ஒர்ந்து சிந்தித்து வரும் அளவு மனிதன் உயர்ந்து வரு கிருன். கண் எதிரே கண்ட காட்சிகளை எண்ணி ஆராய்ந்து உண்மைகளே உணர்ந்து கொள்பவர் உயர்ந்த பெரியோர்களாப் விளங்கி நிற்கின்றனர். அவ்வாறு ஒருமையோடு உணராதவர் சிறுமையாளராய் மறுமை கலமிழந்து வெறுமையாப் வாழுகின் றனர். தெளிந்த உணர்வில்லாத அந்த வாழ்வு இழிக்க மிருக மாய்க் கழிந்து போகின்றது. ஒருவன் இவ்வுலகில் வந்து பிறந் திருக்கிருன்; மனிதன் என்று சிறந்து நிற்கிருன், மன வுனர் வின் வாய்ப்பால் அந்த மாட்சியை மருவி யுள்ளான்; இந்த கிலை யை எய்தியுள்ளவன் தன் சொந்த நிலைமையை உணர்ந்து தெளி யானுயின் அது எங்க வகையிலும் மிகுந்த பழியாகின்றது. உலக நிலையை ஒர்தலாவது அதில் தோன்றியுள்ள மக்களு டைய கிலேமை நீர்மைகளைக் கூர்ந்து தெளிதல். எவ்வளவோ பெரிய செல்வர்கள் பெருகி யிருந்தனர்; அவர் இருக்க இடமும் தடக்கெரியாமல் மறைந்து போயினர். 'கோடிக் கணக்கில் பொருள் கூடி இருந்தவரும் ஒடும் கையுமாப் நாடறிய கின்ரு ரே!” என்.று வடமொழியில் ஒரு கவி பாடியுள்ளமையால் உடைமைகளின் நிலைமைகளை உணரலாகும். அழிவுடையதை அழிவடையுமுன் அழியா வகையில் வழி செய்து கொள்ளின் அது விழுமிய நீர்மையாய் விளங்கி இன்பம் கெழுமி யுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/235&oldid=1326399" இலிருந்து மீள்விக்கப்பட்டது