பக்கம்:தரும தீபிகை 4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1419 இது பழி துயர் ஒழிந்து விழி திறந்து உய்க என்கின்றது. இந்த உலக வாழ்வு இம்மை என வந்தது. மனிதனுக்கு அமைந்துள்ள ஆயுள் அளவும் இங்கே வ | ழ் ங் து வருகிருன். அதன்பின் மாய்ந்து போகிருன். மருவிய உயிர் போயுள்ள அந்த உலகம் மறுமை என கேர்ந்தது. எல்லாருக்கும் இகமாய் நல்ல காரியங்களைச் செய்வதால் புகழும் புண்ணியமும் உளவா கின்றன. புகழ் இம்மைக்கும், புண்ணியம் மறுமைக்கும் உரி மையாய் நின்று உயர் பேரின் பங்களை உதவுகின்றன. உயர்ந்த ஆன்ம ஆதியங்களான இவை சி ற ங் த நீர்மை களால் விளைந்து வருகின்றன; இழிந்த பான்மைகளால் அழிந்து போகின்றன. விளைவும் விளிவும் வினைகளால் விரிகின்றன. மதுபானம் மதிகேடாப் இழிவே கருதலால் அதனை உடை யவர் பழியாளராய் இழிவடைகின்றனர். எவ்வளவு உயர்ந்த வராய்ச் சிறந்திருந்தாலும் கள்ளுக்குடி அவரை இழிந்தவராக்கி மிகுந்த எள்ளல்களை விளைத்து விடுகின்றது. சுக்கிரீவன் உயர்ந்த அரசன், சிறந்த போர் வீரன். இராமன்பால் பேரன்புடையவன். தன்னை ஆதரித்து அருளிய அப்பெருமானுக்கு உரியகாலத்தே வந்து உதவி புரிவதாக உறுதி மொழி கூறி மீண்டான். கிட்கிங்கையில் அமர்ந்து அரசுபுரிக் திருந்தான். இளமையிலேயே குடியில் பழகியிருந்தான் ஆத லால் கள்ளில் உள்ளம் பறிபோப் அதனை உவந்து பருகிவங்கான். குறித்த தவணையை மறந்து போனன். இராமன் உள்ளம்கனன்.று இலக்குவனே எவினன். அந்த வீர இளவல் வில்லும் கையுமாப் வெகுண்டு வந்தான்; மதுவின் மயக்கத்தால் மதியழிந்திருந்த சுக்கிரீவன் உணர்ந்தான். விளைந்துள்ள விபரீதங்களை யெல்லாம் கினைந்து உள்ளம் வருந்தினன். கள்ளின் தீமையை வெறுத்து இகழ்ந்தான். அப்பொழுது வெப்போடு அவன் சொல்லியுள்ள கிலைகளை அயலே காண வருகிருேம். சுக்கிரீவன் துக்கித்துச் சொன்னது. . உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் ஒருவர்க்கின்னம் பெறலுண்டே அவரால் ஈண்டுயான் பெற்றபேருதவி புற்றது இறலுண்டோ என்னிற் றீர்வான் இருந்த பேரிடபை யெல்லாம் நறவுண்டு மறந்தேன் காண கானுவன் மைந்த என்ருன். (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/266&oldid=1326432" இலிருந்து மீள்விக்கப்பட்டது