பக்கம்:தரும தீபிகை 4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு L42 i. இழிவுடையனப் அழி தரகுக்கு ஆளாயினேனே! இவள் காப், இவள் மனைவி என்று பேகமும் கெரியா கபடி அறிவை அழித் துக் .ெ க டி ய பழிபாதகங்களை விளைக்கின்ற ஈனக் கள்ளைக் குடிக்க நான் அந்த மான விரன் முகத்தில் இனிமேல் எப்படி விழிப்பேன்? அந்தோ! ஞானபோகம் இன்றி ஊனமான உலக மையலில் மயங்கிக்கிடக்கின் றேன்; மேலும் திய மதுவையும் பருகிப் பேயகுயினேன்; கன்னே அறிந்தவரே பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவர் என முன்னே வேகங்கள் எல்லாம் முழங்கி யுள்ளன. அந்த மெய்யுணர்வு பரிசுக்கமான விரத சீலங்களால் உண்டாம்; இழிந்த அசுத்தமான கள்ளை உண்ட நான் எவ்வாறு கதி காண்பேன்? நெருப்பில் நெய்யை வார்த்ததுபோல் திய மதி கேட்டில் மதுவையும் குடித்துக் கொடிய தீயகுயினேன்; உள்ள அழுக்கைக் கழுவாபல் மேலும் சேற்றைப் பூசிக்கொள்ளும் மூட வெறியர்போல் குடி வெறியால் பீடை அடைக்கேன்; திய நஞ்சினும் கள் தீயது; கன்னே உண்டவரை நஞ்சு கொல்லுமே யன்றி நரகத்தில் கொண்டுபோய்த் தள்ளாது. பழி பாவங்களை விளைத்து இருமையும் கெடுத்து அடு காகில் ஆழ்த்தும் கொடிய கள்ளை நினைந்த போதெல்லாம் என் நெஞ்சம் கடுங்குகிறது. அதனேக் கண்ணுல் பார்க்கவும் இனி என்னுல் முடியாது. கருதி லும் நெஞ்சம் வேகின்ற மதுவை இனி கான் தீண்டுவேன் ஆல்ை இராமத் துரோகம் செய்த கொடிய பாதகளுப் அடுகர கில் போவேனுக’ என்று வானர வேந்தன் இங்ங்னம் உள்ளம் மறுகி உணர்வு பெருகி உருகி உரையாடியுள்ளான். கள்ளுக்குடியால் தனக்கு நேர்ந்துள்ள இழி பழியையும் அழிதுயரையும் நேரே அனுபவித்தவன் ஆதலால் இப்படி அதனை வெறுத்துப் பேச நேர்ந்தான். மீண்டும் குடியில் வீழ்ந்துவிடாத படி அணைகோலி ஆணையிட்டுச் சக்தியம் செய்து கொண்டான். அரச பதவியில் உள்ள ஒரு சிறந்த குடிகாரனேக் கொண்டு குடியின் தீமையை உலகம் தெளிக் து உப்யும்படி திவ்வியமான ஒரு பிரசங்கத்தைக் கவிச்சக்கரவர்த்தி செய்திருக்கும் வித்தகம் அதிசய விசித்திரமாய்ச் சுவை சுரங்துள்ளது. உண்மைகளை உய்த்துனர்ந்து கொள்ளுவது எவ்வழியும் நன்மையாம். கள்ளே வாய் வைத்தல் கடுவில் கொடிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/268&oldid=1326434" இலிருந்து மீள்விக்கப்பட்டது