பக்கம்:தரும தீபிகை 4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1438 த ரு ம தீ பி. கை எவ்வளவு இனிமையாக உறுதி நலங்களைப் போதித்தாலும் புல்லறிவாளர் திருந்தார்; உள்ளம் போனபடியே களித்து நடந்து கெடுவர் என இது காட்டியுள்ள காட்சியைக் கருதிக் கானுக. 6.17 உரியகலம் ஒன்றும் உணரார் செருக்கிப் பெரியர் தமையுமே பேணுர்-கரிய மனப்புன்மை யோடு மருண்டு திரிவார் இனப்புன் சிறியர் இழிந்து. (எ) இ-ள் புன்மையான சிறுமையாளர் நன்மை யாதும் உணரார்; நல்ல பெரியோரைப் பேணுர்; உள்ளம் இருண்டு எள்ளல் இழிவு களில் புரண்டு எவ்வழியும் மருண்டு இழிந்து திரிவர் என்க. உணர்வு மனிதனுக்குக் தனி உரிமையாய் அமைந்திருக்கி றது. இனிய நீர்மைகளால் அது கூர்மை மிகுந்து சீர்மையோடு ஒளி பெறுகின்றது. நீர்மை குன்றியபொழுது உணர்வு கூர்மை மழுங்கிக் குருடுபடுகின்றது; படவே அறிய வேண்டியதை அறிய முடியாமல் அவலமடைகின்றது. நல்ல தன்மைகள் இல்லையாளுல் அந்த மனிதனுடைய அறிவு பொல்லாக வழிகளில் புகுந்து அல்லல்களே புரிகின்றது. கொடியவன் தீயவன் சிறியவன் புல்லன் என வெளியே தெரி வன எல்லாம் உள்ளே இழிக்க குணக் கேடுகளின் விளைவுகளே யாம். மூலம் கெட முழுதும் கெடுகின்றது. புன்மையுடையவர் புலைமக்களாய் இழிகின்றனர். நிலைமை தாழவே நீசங்கள் வளர்ந்து காசங்களே செய்ய நேர்கின்றனர். பெரியர் தமையுமே பேணுர் என்றது சிறுமையாளரது கிலேமை தெரிய வந்தது. நல்ல குன நீர்மைகளுடையவர் மேலோராய் மிளிர்கின்ற னர். அங்கனமில்லாதவர் கீழோராய்க் காழ்கின்றனர். அத் தாழ்வால் வாழ்வும் சூழ்வும் பாழாகின்றன. மனப் புன்மையோடு மருண்டு திரிவார். இழிமக்களுடைய நிலைகளை இது விளக்கி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/285&oldid=1326451" இலிருந்து மீள்விக்கப்பட்டது