பக்கம்:தரும தீபிகை 4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1457 3ே8. பொல்லாத புன்மை பொருமையே பூவுலகில் எல்லா இழிவும் எதிர்விளேத்து-கல்லார் அருவருத்து நீங்க அவங்கள் பெருக்கிக் கருவறுத்து கிற்கும் கடு. (க.) இ-ள் பொருமை பொல்லாத புலையுடையது: எல்லா இழிவுகளையும் விளைப்பது, நல்லார் அருவருக்த வெறுப்பது, அ அது அழி கேடு களைப் பெருக்கி வழி முறைகளே ஒழிக்கும் கொடிய விடம். கடு= நஞ்சு. கடுத்துக் கொல்வது என்னும் காரணமுடையது. நல்ல தன்மைகளால் நலன்கள் பல விளைகின்றன; பொல் லாக புன்மைகளால் அல்லல்களே வருகின்றன. அவகேடுகள் தெரியாமல் அறிவிலிகளாப் அழிந்து படுகின்றனர். மயலான இயலால் உயிர் வாழ்வு துயர் வாழ்வாகின்றது. எண்ணம் பழுதாய பொழுது அந்த மனிதன் இழிவாய் அழிவுப்றுகிருன். இனிய கினேவுகளால் அமைதியான புனித வாழ்வுகள் பொங்கி வருகலால் அவை எங்கும் இன்ப நிலையங் களாப் நிலவியுள்ளன. நல்ல எண்ணங்களையே பழகி வருகிற நெஞ்சு எல்லா மேன்மைகளுக்கும் இன்பங்களுக்கும் மூலகார னமாயுள்ளமையான் உயிர் வாழ்வின் சீவ சாடியாப் அது ஒளி புரிந்துள்ளது. நல்ல மனமுடையவன் எல்லா உயர்வுகளையும் எளிகே அடைந்து கொள்கிருன். மனம் புனிதமாய் நலமுறின் அம் மனித வாழ்வு தனி மகிமை பெறுகின்றது. 'மன தலத்தின் ஆகும் மறுமை.” (குறள், 459) என்ற தல்ை அங்க மனத்தின் அருமை பெருமைகளை ஆப்க்த அறிந்துகொள்ளலாம். அதனைப் பேணிவருவது பெருமாண்பாம். - கருதிய இன்ப நலங்களையெல்லாம் உரிமையுடன் உதவி உயர்க்க சிவ அமுகமாய் அமைந்திருக்கிற நல்ல மனம் பொல் லாத பொருமையால் புலைப்பட்டு இழிகின்றது; இழியவே அதனை யுடைய மனிதன் அழிவையே அடைகிருன். o பிறருடைய உயர்ச்சிகளையும் மகிழ்ச்சிகளையும் க ண் ட பொழுது உள்ளம் பொருமல் புழுங்குவதால் பொருமையாளன் எவ்வழியும் வெவ்விய துயரங்களேயே அனுபவிக்க சேர்கின்றன். 1833

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/304&oldid=1326470" இலிருந்து மீள்விக்கப்பட்டது