பக்கம்:தரும தீபிகை 4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம் 1477 விருப்பு வெறுப்புகள் சீவ சுபாவங்களாய் அமைந்திருக் கின்றன. கன் விருப்பத்திற்கு மாறு நேர்ந்தபோது அங்கே கோபம் உண்டாகின்றது. உணர் ச்சியும் இச்சையும் உடையவன் ஆதலால் மனிதனிடமிருந்து முனிவு மூண்டு ள் ழுகின்றது. இந்தக் கோபத்தை மேலோங்க விடாமல் அடக்கினவன் ஆன்ற அமைதியாளனப் மேன்மை பெறுகின்ருன். அடக்க முடியாதவன் அல்லல் பல அடைந்து தாழ்வுஅறுகின்ருன். கோபம் தீயது ஆதலால் அது எவ்வழியும் வெவ்விய துய ங்களையே விளைத்து விடுகின்றது. மனம் கனன்று முனைந்து வருதலால் கோபத்திற்கு முனிவு என்று ஒரு பெயரும் வந்தது. "முனிவும் செயிரும் சிற்றமும் வியர்ப்பும் சினமென் கிளவி தெரிக்கும் காலே; கறுவம் கோபம் கலாம்.மறம் குரோதம் வெகுளி என்பர் வேரமும் ஆகும்.” (பிங்கலங்தை) கோபத்தின் பரியாய நாமங்களாப் இவை வந்துள்ளன. மனிதனுடைய உள்ளத்திலிருந்து கொதித்து எழுகின்ற துடிப்புகளை இந்தப் பெயர்களின் குறிப்புகளால் உ ண ர் ங் து கொள்ளுகிருேம். உருவ நாமங்கள் உலகறிய வந்தன. ஆச்ை எ ப்படி மனிதனிடம் படிந்திருக்கிறதோ அப்படியே கோபமும் தொடர்ந்திருக்கிறது; இங்கத் தீய தொடர்புகளிலி ருந்து விலகினவர் தாயராப் உயர்கின்ருர்; விலகாதவர் Г ГУЛГА/ மயக்கங்களை யுடையராப் மறுகி புழல்கின்ருர். உடம்பில் தொடர்ந்து படிகிற அழுக்கை நீரால் கழுவி நாளும் சுத்தம் செய்து வருகல் போல் உள்ளத்தில் எழுகிற மாசுகளை நீர்மையால் ஒழித்து வருபவர் சீர்மை பெற்றுச் சிறந்து விளங்குகின்ருர். புனிதம் புண்ணியம் புரிகின்றது. மனத்தில் சினம் மூளும் பொழுது அமைதியான மதி நலத் தால் அதனை விரைந்து அடக்கிவிட வேண்டும். அவ்வாறு அடக் காது நீளவிடின் அல்லல் பல விளைந்து விடும். * - கூடு முன்னே கொன்றிடுக. என்றது கோபத்தை அடக்கும் குறிப்பைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தது. கலையை நீட்டும்போதே சினத்தை அடக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/324&oldid=1326490" இலிருந்து மீள்விக்கப்பட்டது