பக்கம்:தரும தீபிகை 4.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாருன கோபம் செவ்வி கோய்ந்து வருதலால அது வெவ் விய தீமையாய் வெறுக்கப்படாது. நல்ல குறிக் கோளோடு வரும்பொழுது கோபம் ஒரு குணமாய் மாறுகிறது. வெகுளிச் சுவை என இனிமையான பேரால் அது குறிக்கப்படுகிறது. ரெளத்திரரலம் என்பது உருத்திர மூர்த்தியின் உக்கிர வீர கோ பத்தை உணர்த்தியுள்ளது. தீமைகளைத் கொலைத்து நன்மைக ளைப் பாதுகாக்க எழுகின்ற வெகுளி விழுமிய விரமாப் விளங்கி மிளிர்கின்றது. தேவ கோபம் என்பது இங்கே சிங்திக்கத்தக்கது. தரும நீதிகளின் பொருட்டுப் பெரியோர்களிடமிருந்து எழுகின்ற கோபம் போற்றப்படுதலால் அதன் ஏற்றம் தெரிய லாகும். நன்மை கோய்ந்தது செம்மை வாய்ந்தது. கரும சாதனமாப் உரிய இடத்தில் உறுகிற முனிவு இனி மையாப் அமைகின்றது. கோபத்தில் பாவம் கலவாதது ஆபத் திற்கு உதவிசெய்து வருகிறது. அதனை அனுபவத்தில் அறிந்து வருகிருேம். தன் கோபத்தால் பிறர்க்கு வீணே கொடிய துய ரங்களை விளைக்கும்போதுதான் அவன் பாவத்தை அடைய நேர் கின்ருன். பாபம் படியாக கோபம் பயன் படிந்து வருகிறது. “Be ye angry, and sin not.” (Bible) 'நீங்கள் கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்' என்னும் இது இங்கே அறியவுரியது. தீமையில்லாத கோபமும் உண்டு என்பதை இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். இலகு வாக எதிலும் முனிவு செப்பவரை ச் சுலபகோபர் என்பர். இவ்வாறு உல்லாச நிலையில் இல்லாமல் பொல்லாத புலேயில் கிமிர்ந்து நீண்டால் அக்கோபம் கொடிய ைேமயாய் மூண்டு முடிகிறது. ஆங்கார ஆணவங்களால் ஓங்கி எழுவது அவலக் கேடுகளை விரைந்து விளைத்து விடுகிறது. தெள்ளிய மதிமான் களையும் தேர்ந்த தவசிகளையும் கோபம் நிலை குலைத்துள்ளமை யால் அதனே வெல்வது எவ்வளவு கடினம்! என்பது விளங்கி கின்றது. - 'ஒள்ளிய தவத்தால் கல்வியால் உணர்வால் உண்மையால் உணர்ந்தவர் உயர்ந்தோர் எள்ளிய குற்றம் இல்லவர் எய்தும் வெகுளியால் இப்படிப் பட்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/337&oldid=1326503" இலிருந்து மீள்விக்கப்பட்டது