பக்கம்:தரும தீபிகை 4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. காப ம 1497 ஒரு வீட்டில் தீ மூண்டு பற்றினல் அங்கு உள்ளவர் அஞ்சி அலமருகின்றனர்; அது போல் கோபம் கொதித்து மூண்டால் கரணங்கள் யாவும் கலங்கி புழலுகின்றன. நெருப்பு நீரைக் குடித்தல் போல் உயிர் ஆதாரமான உதிரத்தைக் கோபம் உறிஞ்சிவிடுகிறது; விடவே சீவசத்து தேய்ந்து போகின்றது. சின்ன ஒருசினத்தால் சீவசத்தி தேய்ந்துபோய் இன்னல் பலவும் எதிரெழுமே-அன்னகொடுங் தீயை அவியாமல் திங்காய் வளர்த்துவரல் மாயும் வகையே மருண்டு. தன்னுடைய அழிவை எண்ணி நோக்காமல் கண் குருடு பட்டுக் கழித்து ஒழிபவன் இழிந்த மனிதளுப் ஈனமுறுகின்றன். கோபம் புகுந்த போது கெடு மூச்செறிந்து நெஞ்சு துடி த்து நிலை குலைந்து படுகிருன், பட்டும் பாடுதெரிந்து விலகாம படுதுயருழந்து பாழாப் அழிகின்றன். கண்கள் சிவந்து, புருவம் துடித்து, உடல் வியர்த்து, உள் ளம் கலங்கி எள்ளல் இளிவுகளோடு விரைந்து வருதலால் கோபத்தின் கொடுஞ் செயல்களை உணர்ந்து கொள்ளலாம். வெகுண்டோன் அவிநயம் விளம்பும் காலே மடித்த வாயும் மலர்ந்த மார்பும் துடித்த புருவமும் சுட்டிய விரலும் கன்றின உள்ளமொடு கைபுடைத் திடுதலும் அன்ன நோக்கமோடு ஆய்ந்தனர் கொளலே." (அவிநயம்) உள்ளத்தில் வெகுளி மூண்டபொழுது உடலில் இன்ன ாருன சின்னங்கள் தோன்றும் என்னும் இது ஈண்டு உன்னி உணரவுரியது. அகத்தின் அவல நிலைகள் அயல் அறிய வந்தன. உள்ளம் கலேய உயிர் குலேய என்றது கோபத்தின் நிலையை உணர்ந்து நெஞ்சம் தெளி ந்து அதனை விலகி வாழவேண்டி. மேலான கதிநிலைகளுக்குச் செல்லவிடாமல் உயிர்களைத் துயர்களில் தள்ளி விடுதலால் கோபம் கொடிய நீசப்பகை எனப் பேச நேர்ந்தது. உலகைத் துறந்து போப் அருந்தவம் புரிந்து சிறந்த ஞான சீலர்களாய் உயர்ந்துள்ளவர்களையும் கோபம் புகுந்து கெடுத்து 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/344&oldid=1326510" இலிருந்து மீள்விக்கப்பட்டது