பக்கம்:தரும தீபிகை 4.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம் 1503 எனத் தத்துவராயர் இவ்வாறு அறிவுறுத்தி யிருக்கிருர், உயிர்க்குக் கொடிய துயரங்களைச் செய்வது ஆதலால் சினத்தை அடக்குவது எவ்வழியும் அவசியமாய் அமைந்தது. வெகுளி நீங்கிய பொழுது அங்கே அரிய பல நன்மைகள் உரிமையோடு தொடர்ந்து ஓங்கி வருகின்றன. - - - - உள்ளிய எல்லாம் உடன்எப்.தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். (குறள், 309) தன் உள்ளத்தில் கோபம் கொள்ளாதவன் விரும்பிய செல் வங்களை யெல்லாம் உடனே அடைந்து கொள்ளுகிருன் எனத் தேவர் இங்ஙனம் உறுதி கூறியுள்ளார். இது ஆழ்ந்த கருத் துடையது; மிகவும் ஆப்க் து சிந்தனை செய்யவுரியது. கோபம் தியது; உள்ளத்தைச் சிறுமைப் படுத்தி உயிரைத் தாழ்த்துகிறது; அஃது இல்லாது ஒழியின் சீவன் தெய்வீக நிலை யை அடைகிறது; அடையவே எல்லா மகிமைகளும் எளிகே விரைந்து வந்து கைகூடுகின்றன. "... ്. :முனியாகார் முன்னிய செய்யும் திரு. (நான்மணி, 40) கோபம் கொள்ளாதவர் உள்ளியன யாவும் உடனே உவந்து செய்தருளத் திருமகள் எதிர் நோக்கி கிற்கிருள் என விளம்பி நாகனர் இவ்வாறு விளம்பி யிருக்கிரு.ர். கொடிய கோபத்தை ஒழித்தவர் அரிய பேறுகளே யெல் லாம் எளிதே எய்தி இன்பம் உறுகின்ருர் இம்மகிமையை மருவி மாண்புடன் வாழுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கோபம் மிகவும் கொடியது. அறிவு அமைதிகளை அழிப்பது. துயரங்களை விளைப்பது. உயிரைப் பாழ்படுத்துவது. பழி பாவங்களைச் செய்வது. தியினும் தீயது. திங்குகளே புரிவது. யாண்டும் ஆபத்தை யுடையது. அதனே ஒழித்தவர் உயர்ந்தவராவர். எல்லா கலங்களையும் எய்தி மகிழுவர். சுச-வது கோபம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/350&oldid=1326516" இலிருந்து மீள்விக்கப்பட்டது