பக்கம்:தரும தீபிகை 4.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து ஐந்தாம் அதிகாரம் அஃதாவது இழிந்த இச்சை, மனிதனை இழி நிலையில் தள்ளி அழி துயர் செய்யும் அவலமுடையது ஆதலால் இதனே ஒழித்து ஒழுக வேண்டும் என உணர்த்துகின்றது. கோபத்தோடு அனு கிய தொடர்புடைமையின் அதன்பின் இது வைக்கப்பட்டது. 4ே1. காமம் உயிரைக் கடைப்படுத்தி எஞ்ஞான்றும் தீமை அடையத் திருப்புமால்-சேமம் பெறவிரும்பி ரைப் பிழைபாடு நீங்கி அறவரென கின்ருர் அமர்ந்து. (க) இ-ஸ். புன்மையான காம இச்சை உயிரை இழிவுபடுத்தி ஈன முறச் செய்யும்; மேன்மையான இன்பம் பெற விரும்பினர் அப்புன்மை நீங்கிப் புண்ணிய சீலராப் உயர்ந்து கண்ணியம் ஓங்கி விளங்குவர் என்பதாம் உயிர்வாழ்வு பலவகையான சோதனைகளையுடையது. தீய சூழல்களிலிருந்து தன்னைத் தாயனக்கிக் கொண்ட போது கான் மனிதன் மேன்மையான மகிமைகள் தோய்ந்து மேலான கதி களை அடைகின்ருன். மாய மயக்குகளுக்கு இடையே மருவிக் கிடத்தலால் சீவர்கள் துளயராப் உயர்தல் அரிய செயலாயுள்ளது. ஐந்து பொறிகளின் வழியே வாழ்வு நடந்து வருகிறது. மாய மோகங்கள் யாண்டும் நீண்டு கிற் றலால் யாவும் யே வெறிகளாய்ச் சேர்ந்து திரிகின்றன. புலன்களிலேயே பாப்த்து புலையாய்த் தோய்ந்து எவ்வழியும் சீவர்கள் இழிந்து வருதலால் புலை வாழ்வே எங்கும் நிலையாய் ஒங்கி வர நேர்த்தது. இந்த அவலவாழ்வு இழி பழியுடையது என்று உணர்ந்து உள்ளம் தெளிந்தவர்கள் உறுதி நலங்களை ஒர்ந்து சீலவேலி கோலி மேலே போகிரு.ர்கள், மாயமயக்கங்களுள் காமம் மிகவும் தீயது. உணர்வைச் சிதைத்து உயிர்களுக்குத் துயர்கள் விளைப்பது ஆதலால் இது சீவ விரோதி, கீய பகை என அஞ்ச சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/351&oldid=1326517" இலிருந்து மீள்விக்கப்பட்டது