பக்கம்:தரும தீபிகை 4.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1525 மயக்கியுள்ளது. அந்த மயக்கத்துள் மயங்கி உயங்கி எவ்வழி யும் தியங்கி உலகம் யாண்டும் இயங்கி வருகிறது. 'கைய லா மையல் கோயால் தன்மதி இழந்து வையம் உய்யலாம் வழிஒன் றின்றி உழல்கின்றது ஒழிவில்காலம் மெய்யறி வமுகம் மாக்கி மேவிய மையல் மாய்ந்து பொய்யெலாம் தெளிந்த போதே புனித பேரின்பம் எய்தும்.' என்னும் இது இங்கே கூர்ந்து சிந்திக்கத்தக்கது. உண்மையான உணர்வு உதயமான பொழுதுதான் புன்மை யான இழிவுகள் நீங்கி மனிதன் மேலான நிலையை அடைய நேர்கின்ருன். உத்தம கதி சித்த சுத்தியால் வருகின்றது. உயர்ந்த மேன்மைகள் யாவும் சிறந்த பான்மைகளால் விளைந்து வருகின்றன. நெறிமுறையான கட்டுப்பாடுகள் மனித வாழ்வைப் புனித நிலையில் உயர்த்தி யருள்கின்றன. பயிரை வேலியால் காப்பதுபோல் சில வேலியால் உயிரை மேலோர் பேணி வருகின்றனர். காப்பின் அளவு கதி விளைகின்றது. தரும நீர்மைகள் தோய்ந்த மேலான ஒழுக்கத்திற்கு சீலம் என்று பெயர். பண்பு படிந்து பான்மை சுரங்து இவ்வாறு மேன்மையில் உ யர்ந்திருந்தாலும் த ரு ன மங்கையர்களோடு பழக நேரின் உள்ளம் தளர்ந்து எள்ளலுற நேரும். பெண்களைக் கண்டபொழுது ஆண்களுக்கும், ஆண்களைக் கண்டபோது பெண்களுக்கும் இயல்பாகவே மகிழ்ச்சியும் காதலும் மருவி எழுகின்றன. இருபாலாரும் ஒருவரை ஒருவர் உவந்து விழி நோக்கிலேயே களி பூசீது வருவது இயற்கையின் விசித்திர மாப் ஒளி பூக்க வருகின்றது. பெண் யில் அருகே கின்ருல் ஆண்மயில் களிமிகுத்து ஆடுகின்றது. பெண்கள் கண்கள் காண ஆண்கள் தங்கள் பெருமைகளைப் பிலுக்கிக் காட்டி வெளியே மினுக்கி வருவது உலகக் காட்சிகளில் பாண்டும் பெருகி வருகிறது 'பெண் மயக்கு பெரிய மயக்கு” என்பது பழமொழி. தையலார் மையலில் இவ்வையம் மறுகி யிழிந்துள்ள கிலைமையை இம்முதுமொழி மதிதெளிய விளக்கி ஸ்ளது. மாய மயக்கிகள் என அவர் மருவி யுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/372&oldid=1326538" இலிருந்து மீள்விக்கப்பட்டது