பக்கம்:தரும தீபிகை 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1200 த ரும தீ பி. கை உயிர் உடலில் வாழ்ந்து வரும் நிலையைக் கருதி புனரின் அது ஒரு பெரிய அதிசய வியப்பாம். ஆன்மா, சீவன், பிராணன் என இன்னவாறு பேசி வருவது எ கை? அது என்ன உருவில் உள்ளது? எனின், இக் கேள்விகளுக்கு எளிதில் பதில் சொல் அலுவது அரிது. மூக்கிலிருந்து வெளி வருகிற மூச்சைக் கொண்டு உயி உள்ளது என்னும் பேச்சு வழங்கி வருகிறது. உயிர்ப்பு என். மூச்சுக்கு ஒரு பெயர். உயிரை புடையது, உயிர்க் காற்று என் னும் பொருள்களை அது உணர்த்தி யுள்ளது. உயிராதா மாய நின்று உடலில் உலாவி வருகிற அகன் நிலையை இகளுல் உணர்ந்து கொள்ளலாம். - தன்னை அறிய நேர்ந்த மகான்கள் முன்னதாக இந்த மூச்சு நிலையை அறிந்து கொள்ளுகின்றனர். மூச்சை அறிந்தான் முடிவை அறிந்தான் என்பது பழமொழி. அதன் அதிசய கிலேமை யையும் தலைமையையும் இம் மு.அது மொழி மதி தெளியச் செய் துள்ளது. - தன் நாசியிலிருந்து வெளிவருகிற சுவாசத்தில் கருத்தைச் செலுத்தி அதனேடு பழகி வருபவன் நாளடைவில் விழுமிய ஆன்ம கரிசனம் செய்தவனகிருன். ஆகவே அவன் ஈசனுேடு வாசி பேச நேர்கின்றன். சரநிலை, பிராணுயாமம், இராசயோகம் என மேலான நிலை களில் பேசி வருவன எல்லாம் மூச்சை நோக்கிச் செய்யும் தவ ஒழுக்கங்களேயாம். மனம் ஓயாமல் அலேயும் இயல்பினது. மூச்சை ஒழுங்காக வசப்படுத்தின் மனம் அங்கே எளிதாய் வசப்பட்டு நிற்கும். ஞான தீரர் கூறி வருகின்றனர். - கடிவாளத்தில் குதிரை அடங்கி நிற்றல்போல் சுவாசத்தில் மனம் அடங்கி நிற்கிறது. அங்கிலே யோகம் ஆகிறது; ஆகவே அதனை யுடையவர் யோகிகள் ஆகின்றனர். f மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக் கும் மூலமுகலாயுள்ள மனம் இனிமையாப் அடங்கவே அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/45&oldid=1326198" இலிருந்து மீள்விக்கப்பட்டது