பக்கம்:தரும தீபிகை 4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54, ப ண் பு L16] வேம் என உரைத்துள்ளமையால் இவருடைய உள்ளப்பண்டை பும் உறுதி நிலையையும் நாம் உணர்ந்து மகிழ்கின்ருேம். பண்புடைமை எவ்வளவு மகிமையுடையது! என்பதை இத ஞல் தெரிந்து கொள்ளுகிருேம். மனிதன் எவ்வளவு செல்வங் களை யுடையயிைனும் இவ்வுடைமை ஒன்று இல்லையானல் அவன் கடையன யிழிந்து படுகிருன். உயர்ந்த உறுதி நலங்களும், சிறந்த நடைமுறைகளும் பண் புடையாளனிடம் ஒருங்கே கிறைந்து நிற்றலால் அவன் யாண்டும் மேன்மையாய் விளங்கி நிற்கிருன், ஆகவே எல்லாரும் அவனே வியந்து மகிழ்ந்து புகழ்ந்து வருகின்றனர். கல்லாது போகிய நாளும் பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும்-ஒல்வ கொடாஅது ஒழிந்த பகலும் உரைப்பிற் படாஅவாம் பண்புடையார் கண். (நாலடியார், 166) நல்ல நூல்களை நாளும் பயின்று வருதல், பெரியோர்களி டம் போய் வணங்கியிருந்து அறிவுரைகளைக் கேட்டல், இயன்ற அளவு எவர்க்கும் உவந்து உதவுதல் என்னும் இவை பண்புடை யாரிடம் தினமும் நிகழும் செயல்களாம் என இது உணர்த்தி புள்ளது. வாழ்வின் இனிய இயல்புகள் மனிதனைப் புனிகளுக வெளிப் படுத்துகின்றன. கல்வியைக் கருத்தான்றிக் கற்றலும், பெரியவர்களை மதித் துப் பேணுதலும், எளியவர்களுக்கு இரங்கிக் கொடுத்தலும் மனிதனே மகிமைப் படுத்தும் ஆதலால் அவை இனிய பண்பாடு களாய் இங்கே உவந்து பாராட்ட வந்தன. ஆன்ம வளர்ச்சிக் குரிய நல்ல நீர்மைகள் எல்லாம் பண்பு டையவர்களிடம் இயல்பாக அமைந்திருக்கின்றன. - புனிதம், புண்ணியம் என்னும் அரிய நிலைகள் பண்பின் விளைவுகளாக இனிது விளைந்து வந்துள்ளன. உள்ளம் பண்படின் உ யிர் ஒளி விசி உயர்கிறது; ஆகவே அந்த மனிதன் தேவய்ைத் திவ்விய மகி ைமகளை எவ்வழியும் ol ப்தி மகிழ்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/6&oldid=1326159" இலிருந்து மீள்விக்கப்பட்டது