பக்கம்:தரும தீபிகை 4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1162 த ரும தீபிகை எண்ணம் உயரின் இறையாம் இழியிைே மண்ணுய் விழுவன் மடிந்து. இதனை நாளும் உன்னி ஒழுகுக: 535. சின்ன நினைவுகள் சின்னவனச் செய்துவிடும் அன்ன நிலையை அறிந்துமே-என்னவகை ஆலுைம் மேலான அவ்வழியி லேபழகி வாைேடு வாழ்க வரைந்து, (டு) இ-ள் சின்ன எண்ணங்கள் மனிதனைச் சின்னவனுகச் செப்து விடும் ஆதலால் அப்புன்மைகளை ஒழித்து எ வ்வழியும் நன்மை களைப் பேணி யாண்டும் மேன்மையாக வாழுக என்பதாம். மனநினைவுகளால் மனித வுலகம் இயங்கி வருகின்றது. புறவுலக நிகழ்ச்சிகளுக்கு நிலையான மூல காரணங்கள் உள்ளே மறைந்திருக்கின்றன. செயல்களால் அயல் வருதலால் காரியங்கள் வெளியே தெரிகின்றன, காரணங்கள் கரந்து கிற் கின்றன. வளர்ந்து ஓங்கிய மரத்தை விழைந்து பார்க்கிருேம். அது எங்கிருந்து வந்தது என்பதை மறந்து விடுகிருேம். சிறிய விதையிலிருந்து கிளர்ந்து பெரிய மரம் வெளி வருதல் போல் துணுகிய நினைவுகளிலிருந்து மனிதவுலகம் வெளிப் பட்டுள்ளது, உள்ளே எண்ணிவருகிற எண்ணங்களின் படியே வெளியே மனிதர் வண்ணங்கள் படிந்து வளர்ந்து வருகின்றனர். புனித மான இனிய எண்ணங்களையே எவ்வழியும் பழகி வருபவர் புண் னிய சீலர்களாய்ப் பொலிந்து விளங்கித் திவ்விய கதிகளை எய்து கின்றனர். மனம் புனிதமானுல் மனிதன் தெய்வமாகிருன். தீய நினைவுகளை உடையவர் பாவிகளாப் இழிந்து பழிதுய ரங்களை அடைகின்றனர். உயர்வும் இன்பமும், இழிவும் துன்ப ■ o, _o --- - 轟 ■ f ! ... மும் வெளியிலிருந்து வருவன அல்ல. உள்ளத்திலிருந்து வரு கின்றன. உள்ளம் நல்லதாயின் எல்லாம் நலமாகின்றன. AD † நல்ல எண்ணங்களிலிருந்து புகழ்களும் புண்ணியங்களும் இன்பங்களும் உளவாகின்றன. திய எண்ணங்களிலிருந்து பழி களும் பாவங்களும் துன்பங்களும் விளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/7&oldid=1326160" இலிருந்து மீள்விக்கப்பட்டது