பக்கம்:தரும தீபிகை 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி. நயம் 1217 உணரின் பணிவும் பண்பும் படிந்து வரும். இனிய பணிவால் அரிய பல உயர்வுகள் பெருகி வருகின்றன. “Be not wise in thine own eyes.” (Bible) 'உன்னே நீ ஞானியாக எண்ணிக் கொள்ளாதே' என்று சாலமன் என்னும் நீதிமான் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். தனது அறிவு நிலையைப் பிறர் உவந்து கூறின் அது - பெரு மையாம்; கானே புகழ்ந்து சொல்லின் சிறுமையாம் என்க. அங்கச் சிறுமையில் இழிந்து படாமல் உயர்ந்த பெருந்தன்மை யுடன் ஒழுகி வருக. “Be wiser than other people, if you can; but do not tell them so.” (Lord Chesterfield) 'கூடுமானல் மற்றவர்களைக் காட்டிலும் நீ அறிவாளியாய் இரு, ஆனல் அவர்களிடம் அப்படிச் சொல்லாதே’ என செஸ் டர்பீல்டு என்னும் பிரபு கன் மகனுக்கு இவ்வாறு புத்தி போதிக் திருக்கிருர். உயர்ந்த போதனைகள் உய்த்துணர்வுக ளுடையன. தன்னைப் பெருமைப் படுத்தி ஒருவன் புகழ்ந்து பேசினல் அது பிறரைச் சிறுமைப் படுத்தி இகழ்ந்தது போலாகிறது; ஆகவே வெறுப்புக்கிடமாப் அது விபரீதங்களை விளைக்கிறது. விநயமும் அடக்கமும் பாண்டும் மேன்மைகளை விளைத்து வருகின்றன; செருக்கும் துடுக்கும் எ வ்வழியும் இழிவுகளையே வளர்த்து இன்னல்களே விரித்து நிற்கின்றன. தன்னேப் பெருமையாக உயர்த்திப் பேசுகிறவன் சிறுமை யாப்த் தாழ்த்தப் படுகிருன். அடக்கமாய்க் காழ்ந்து நிற்பவன் யாவராலும் உயர்வாக மதித்துப் போற்றப் பெறுகிருன். உணர்வு பெருக உள்ளம் அடங்குகிறது; அந்த அடக்கக் தில் எல்லா மகிமைகளும் இடம் பெற்று நிற்கின்றன. சாக்ரெட்டீஸ் என்பவர் பெரிய மேகை; கிரீஸ் கேசத்தில் பிறந்தவர்; இற்ை றக்கு இரண்டாயிரத்து முக்தாறு ஆண்டுக ளுக்கு முன்னர் இருந்தவர். இவருடைய அறிவுரைகள் உயர்ந்த செறிமுறைகளை உணர்த்தியுள்ளன. பெரிய அறிஞர் குழாத்தில் ஒரு நாள் இவர் சொன்ன மொழியை உலகம் முழுவதும் வந்து கொண்டாடி வருகிறது. அன்று சொன்னது என்ன? அபலே காண்க. “One thing only I know; and that is that I know nothing.” - (Socrates) 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/62&oldid=1326215" இலிருந்து மீள்விக்கப்பட்டது