பக்கம்:தரும தீபிகை 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s • - o - I - - க் ஐம்பத்தாரும் அதிகாரம் க ல் வி. -o-o-o-o-o அஃதாவது மேலோர்களுடைய எண் னங்களையும் இயல்பு களையும் நூல்கள் வாயிலாகக் கற்றுக் தெளிந்து கொள்ளுதல். மனிதனைப் பண்படுத்தி இனிய குண நீர்மைகளையும் அரிய பல சீர்மைகளையும் கல்வி அருளி வருதலால் விநயத்தின் பின் இது வைக்கப்பட்டது. ஆன்ம அணிகள் அணுகி கின்றன. 55.1. காட்சி புரிந்தருளும் காமர் விழிபோல மாட்சி புரிந்து மனுக்குலக்கை-ஆட்சியாப் பல்வழியும் ஊக்கிப் பயன்காட்டி நிற்றலால் கல்வியும் செல்வமும் கண். (க) இ-ள் * காட்சிகளைக் கண்டருளுகிற அழகிய விழிகள் போல மாட்சி புரிந்து மனித சாதியைப் பல வழிகளிலும் உயர்த்திப் பயன் விளைத்து வருதலால் கல்வியும் செல்வமும் இரண்டு கண் களாம் என்க. i. இது கல்வியின் மாட்சியை உணர்த்துகிறது. அறிவு ஆன்ம நீர்மை. அது இயற்கை செயற்கை என இருவகையாயுள்ளது. மனிதனிடம் இயல்பாப் அமைந்திருப்பது இயற்கை யறிவு, கற்றல் கேட்டல் முதலிய செயல்களால் வள ர்ந்து வருவது செயற்கையறிவு. முன்னது நிலை அ றிவு; பின்னது கலை அறிவு என்க.

  • பொதுவாகப் பிறப்புரிமையில் அமைந்த அந்த அறிவு கல்விப் பயிற்சியால் சிறந்து வருதலால் சிறப்பறிவு என உயர்ந்து தெளி வாய்த் தேசு மிகுந்துள்ளது.

கல்வி என்னும் பெயர் காரணக் குறியாய் அமைந்தது. கல்லுதல் என்பது கிளைத்தல், தோண்டுதல், அருவுதல் என்னும் தொழில்களை உணர்த்தி வரும். உள்ளத்தில் உறைந்துள்ள அறி வைக் கிளேத்துக் கொள்ளுதல், ஆால்களைத் அருவிக் கற்றல் என் அம் வினேக்குறிப்புகளால் கல்வி என்னும் பேர் விளங்கி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/64&oldid=1326217" இலிருந்து மீள்விக்கப்பட்டது