பக்கம்:தரும தீபிகை 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1244. த ரும தீ பி ைக

சில நிதியறைகள் மக்களுடைய கண்ணிரால் நிறைந்திருக்

கிறது” என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் கூறி யிருக்கிரு.ர். பொருளில் ஆசை மிகுந்தபொழுது அருள் நாசம் அடைந்து போகிறது; போகவே எவ் வழியும் இரக்கமின்றி அதனே வவ்வ நேர்கின்றனர். “The ways to enrich are many, and most of them foul.” (Васon) பெரும்பாலும் கெட்ட வழிகளாலேதான் செல்வம் ஈட் டப் படுகின்றது” என பேக்கன் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். ஒருவன் செல்வன் ஆக நேரின் அது பலரை வறியர் ஆக்கி வரு தலால் அங்க ஆக்கத்தின் போக்கும் நோக்கும் புலனப் நின்றன. கல்விமான் என்ன ஒருவன் எழின் பலர் அறிவு துன்ன வருவர். என்றது கல்வி ஈட்டத்தின் விளைவைக் கருதியுணர வந்தது. செல்வம் பிறரை வறியராக்கி ஒருவனிடம் வருகிறது. கல்வி பலரை அறிவுடையராக்கி அடைகிறது. ஒருவன் கல்விமான் ஆல்ை அவனுடைய சொல் செயல்கள் யாவும் நல்ல அறிவுகளை ஊட்டி வருதலால் பலர் அறிவாளிகளாய் வருகின்றனர். “கல்லாரே ஆயினும் கற்ருரைச் சேர்ந்தொழுகின் கல்லறிவு நாளும் தலைப்படுவர்---தொல் சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணிர்க்குத் தான்பயந் தாங்கு.” (நாலடியார்) கல்லாதவரும் கற்றவரைச் சார்ந்தால் நல்லறிவுடையராப் நலம் பல பெறுவர் என இது உணர்த்தி யுள்ளது. _ ) L-} கிலையை ஒர்ந்து பொருள் நயங்களை உணர்ந்து கொள்ளுக. பிறர்க்குச் சொல்லிக் கொடுக்குந்தோறும் கல்வியறிவு உள் ளே பெருகி வருதலால் கற்றவர் பாண்டும் யாருக்கும் அதனை உவந்து வழங்கி வருகின்றனர். வெளியே அள்ளி அருளுவது உள்ளே வெள்ளமாப்ப் பெருகிவருவது அதிசயவிளைவாயுள்ளது. வாரிப் பிறர்க்கு வழங்குங் தொறும்பெருகி வாரி எனவே வளருமால்-நேரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/89&oldid=1326242" இலிருந்து மீள்விக்கப்பட்டது