பக்கம்:தரும தீபிகை 5.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69- தீ ைம 1645 மனமே மனிதனை இயக்கி வருகிறது. அகம் என்று அதற்கு ஒரு பெயர். புறம் வெளியே விளங்கித் தோன்றுகிறது; அகம் உள்ளே மறைந்திருக்கிறது. உள்ளே யுள்ள உள்ளத்தின்படி யே உயிர் உருவாய் நிலவிவருதலால் உலகக்காட்சிகள் பெருகி வருகின்றன. புறத்தை அறம்ஆக்கிப் புகழ் இன்பங்களைத் தரவும், அதனை மறம் ஆக்கிப் பழி துயர ங்களை விளைக்கவும் அகம் வல்ல தாயிருத்தலால் அதன் அதிசய நிலையை அறிந்து கொள்ளலாம். தனிமையாக நோக்கும் போது மனிதன் இயல்பாக நல்ல வன். அயலே குழ்க்துள்ள சூழல்களின்படியே பெரும்பாலும் அவன் உருவாகி வருகின்ருன்; பண்பாடில்லாத கொடியவர் கள் கூட்டுறவால் கொடியவன் ஆகின்ருன், நல்லவர்கள் தொடர்பினல் நல்லவனப் மிளிர்கின்ருன். தீவினையாளர்கள் யாண்டும் மிகுதியா யுள்ளமையால் அவரது சேர்க்கை, நோக்கு யாவும் தீயவன் ஆதற்கு ஏதுவாய் வருகின்றன. தோய்ந்தபடியே தொடர்பு வாய்ந்து விடுகிறது. கொலை களவு முதலிய இழி தொழில்களைச் செய்தவர்களே பெரும்பாலும் சிறைச்சாலையில் கிறைந்திருக்கின்றனர்; அது போல் தீயவினைகளைச் செய்தவர்களே பிறவி ஆகிய சிறைச் சாலையில் பெருகியுள்ளனர். பழகிய வாசனைகள் வழி வழியே தொடர்ந்து வருகலால் இழி நிலைகளை காணுமல் அவர் களிமிகுத்து உழலுகின்றனர். இந்த வெவ்விய கூட்டங்களின் தொடர்புகள் எவ்வழியும் இடர்களுக்கே ஏதுவாகின்றன. ஆகவே பாபகாரியங்கள் படிந்து வர நேர்கின்றன. அவ் வரவால் அவலங்கள் அடர்கின்றன. பொப்பேசுவது எவ்வளவு இழிவு எத்துணைத்தீமை அதனை யாதும் கூசாமல் யாவரும் பேசுகின்றனர். எத்தனை இடர்கள் நேர்ந்தாலும் சத்தியத்தைப் பேணி உத்தம நிலையில் உயர்ந்து கின்ற அரிச்சந்திரனது சரிகையைக் கேட்டு எல்லாரும் உள்ளம் வியந்து உவந்து புகழ்ந்து வருகின்ருர், "உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்." (குறள்,394)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/106&oldid=1326663" இலிருந்து மீள்விக்கப்பட்டது