பக்கம்:தரும தீபிகை 5.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1647 688.தீய வினைஎன்னும் தீயை மடியின்கண் நேயமாய் வைத்து கெடிதோங்கி-நோயைவிளைத் துள்ளம் களிக்கின்ருர் உண்டநஞ்சு கொல்லுமுன்மீன் வெள்ளம் குளிக்கும் விதம். )ع( இ-ள். தீயவினை என்னும் தீயை மடியில் வைத்து நோயைவிளைத் துக் கொண்டு தீவினையாளர் அவமே அழிகின்ருர், உண்ட நஞ்சு கொல்லும் முன் உள்ளம் களித்து வெள்ளம் குளிக்கும் மீன் போல் அவர் அழிவு நிலையில் களிமிகுத்து வருகிருர் என்க. நல்ல எண்ணங்களை எண்ணுகின்றவன் அமுகத்தை உண் னுகின்றவன் போல் எவ்வழியும் இன்பங்களையே எய்துகின் முன், தீய நினைவுகள் கொடிய துயரங்களாப் மனிதனைப் பீடித்து யாண்டும் அல்லலுறுத்தி வருதலால் அவை கொடிய நஞ்சு, நெடிய தி என அஞ்ச நேர்ந்தன. வறுமை பிணி முதலிய துன்பங்கள் எல்லாம் தீவினைகளாலே யே விளைந்து வருகின்றன; ஒரு பிறவியில் செய்தன மறுபிறவி களிலும் மருவி வெய்ய துயரங்களை விளைத்து வருதலால் தீவினை எவ்வளவு கொடியது என்பதை எளிகே தெளிந்துகொள்ளலாம். தன் உயிர்க்கு இதத்தை நாடுகின்றவன் தீமையை எவ்வழி யும் பாதும் செய்யலாகாது; இந்த விதிமுறையைப் பழகிவருப வன் அதிசயமான இன்ப கலங்களை அடைந்து கொள்ளுகிருன். எரிகின்ற விளக்கில் கையை வைத்துச் சிறுகுழந்தைகள் துடித்து அழுவது போல் அறியாமையால் தீவினைகளைத் தழுவி மனிதர் பரிதாபமாய்ப் படுதுயரடைகின்றனர். வெய்ய துயரங்கள் எல்லாம் தான் செப்க தீமைகளாலே யே வருகின்றன என்னும் உண்மையை ஒரு சிறிது உணர்ந்தா லும் எவனும் உய்திபெற நேர்வான். மடமை மருள்களால் கொடுமைகளைச் செய்து கொண்டு கடுமையான தண்டனைகளைக் சிவகோடிகள் அனுபவித்து வருகின்றன. மதிகேடான இந்த மாய மயக்கங்களில் உழன்று சீவர்கள் பாவகாரிகளாப் இழிந்து வருதலை நினைந்து நினைந்த மகான்கள் பரிந்து இரங்குகின்றனர்; ஆனவரையும் ஞான போதனைகளே அவர் செய்து வருகின்ற /றனர்; வரினும் மானமனிதர் ஈனமாகவே இழிந்து போகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/108&oldid=1326665" இலிருந்து மீள்விக்கப்பட்டது