பக்கம்:தரும தீபிகை 5.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1648 த ரும தி பி கை னர். போயினும் விடாமல் தாயவர் போதிக்கருளுகின்ருர். தன்னேத்தான் காதலன் ஆயின் எனத்தொன்றும் துன்னற்க திவினைப் பால். (குறள்,209) தனக்கு இன்னல் இழிவுகள் நேராமல் இருக்க விரும்புகின் றவன் பிறவுயிர்கட்கு யாதொரு தீமையும் செய்யலாகாதுஎனத் தேவர் இவ்வாறு உண்மையை உரிமையோடு உணர்த்தியிருக் கிருர், உயிர் துயரின்றி உயரும் வழி விழி தெரிய வந்தது. கெஞ்சில் கவருண எண்ணங்கள் சிறிது தோன்றினலும் பெரிய துன்பங்களே அவை விளைத்து விடுகின்றன. தன் உள்ளத் தையும் உரையையும் நல்ல நெறிகளில் பழக்கி வருபவன் எல்லா வகைகளிலும் இன்பகலங்களைக் காணுகின்ருன்; பொல்லாத பழக்கங்களுடையவன் யாண்டும் அல்லல் அவலங்களையே அடைய நேர்கின்ருன். “The thought of foolishness is sin: and the scorner is an abomination to men.” [Bible] 'மதிகேடான தீய எண்ணங்கள் பாவம் ஆகின்றது; பழி மொழி கூறுவோன் எல்லாராலும் அருவருத்து வெறுக்கபடு கிருன்.’’ எனச் சாலமன் என்னும் நீதிமான் இங்ங்னம் கூறி யிருக்கிருர். எண்ணமும் சொல்லும் இனிமையுறின் இன்பமாம். இழிவான நினைவுகள் மனிதனை இழிந்தவனுக்கி விடுகின் றன; அக்க உண்மையை உணர்ந்து கொள்ளாமையால் புன்மை யில் களித்து அவன் புலையாடித்திரிகின்ருன். உண்ட கஞ்சு கொல்லும் என்ற து கான் கொண்டதீமை எப்படியும் கன்னேக் கொன்றே விடும் என்பதைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவந்தது. பழி வினைகளைக் கழுவிக் கொண்டு அழிதுயரங் களுக்கே ஆளாகி வருவது அறிவினமாய் வளர்ந்து வருகிறது. வயது முதிர்ந்தும் நல்ல வழிகளைப் பழகிக் கொள்ளாமல் அவலமாயுழலும் முதியரை நோக்கி நரிவெருத்தலையார் என்னும் புவவர் ஒருநாள் பதிநலம் கூறினர். அவரது அறிவுரை பரிவு கோப்ந்து வந்துள்ளது. அயலே வருவது காண்க.

பல் சான் ஹீரே! பல்சான்றிரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/109&oldid=1326666" இலிருந்து மீள்விக்கப்பட்டது