பக்கம்:தரும தீபிகை 5.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1650 த ரும தி பி கை இனிய எண்ணங்களையுடையவர் இன்ப நிலையங்களாய் விளங்குகின்றனர்; கொடிய நினைவுகளையுடையவர் துன்பங்க ளில் அழுந்தித் துடித்து உழலுகின்றனர். தமக்குத் தாமே அல் லல்களை விளைத்துக் கொண்டு அவலமடைந்து வருவது கொடிய மடமையாயுள்ளது. மூடம் எறப் பீடைகள் ஏறுகின்றன. தன்னைப் புண்ணியவான உயர்த்தி இன்பங்களை அடைய வும், பாவியாக் தாழ்த்தித் துன்பங்களை நுகரவும் மனிதன் வல்ல வனுயிருத்தலால் அவனது நிலைமை தலைமைகளை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இனிமையே தனி மகிமைக்குக் காரணமாகிறது. பிற உயிர்களுக்கு இனிய இகாலங்களைச் செப்து வருபவன் தன் உயிர்க்கே எல்லா நன்மைகளையும் செய்தவனுகின்ருன். அல்லல்களைச் செய்பவன் தனக்கே அவலங்களை விளைத்துக் கொள்ளுகிருன். செய்தது சேர வருகிறது. தன் எண்ணம் நல்லதாக மனிதன் நல்லவன் ஆகின்ருன்; அது தீயதாக அவன் தீயவளுகின்ருன்; ஆகவே மேன்மைக்கும் கீழ்மைக்கும் சுகத்துக்கும் துக்கத்துக்கும் தானே மூலகாரண மாயிருத்தலைக் காலக் கழிவில் அவன் உணர்ந்து கொள்ள நேர்கின்ருன். உயர்வும் தாழ்வும் அவனிடமே உள்ளன. கன்னிலைக்கண் தன்னை கிறுப்பானும் தன்னை கிலேகலக்கிக் கீழிடு வானும்--கிலேயினும் மேன்மேல் உயர்த்து கிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான். (நாலடியார்,248) இக்கப் பாசுரம் இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது. மனிதனுடைய கத்துவங்களை இது உய்த்துணரச் செய் துள்ளது. அயலே யிருந்து யாதும் வராது; நினைவு செயல்கள் என்னும் தனது வினைகளினலேயே யாவும் விளைந்து வருகின்றன; இவ்வுண்மையை உணர்த்து கொண்ட அளவு மனிதன் உயர்ந்து கொள்ளுகிருன். தன் நிலைகளுக்குத் தானே காரணனயுள்ளான். தானே தனக்குப் பகைவனும் கட்டானும்; தானே தனக்கு மறுமையும் இம்மையும்; தானே தான்செய்த வினேப்பயன் துய்த்தலால் தானே தனக்குக் கரி, (அறநெறிச்சாரம்,173)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/111&oldid=1326668" இலிருந்து மீள்விக்கப்பட்டது