பக்கம்:தரும தீபிகை 5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1651 தனக்கு உயர்வு தாழ்வுகளை உளவாக்குபவர் கன்னத் தவிர வேறு யாரும் இலர் என உணர்த்தியிருக்கும் இது ஊன்றி உணரத்தக்கது. கல்வினை செய்பவன் தன் உயிர்க்கு இன்பத்தைச் செய்யும் நண்பன் ஆகின்ருன்; தீவினையாளன் துன்பத்தை விளைத் தலால் தன் உயிர்க்கு அவன் கொடிய பகைவனப் முடிகின்ருன். "உத்தரே தாத்மநாத்மாகம் நாத்மாகம் அவளலாதயேத்! ஆத்மைவ ஹயாத்மகோ பந்துராத்மைவ ரிபுராத்மந:” (கீதை,6-5) :ஆன்மாவை ஆன்மாவில்ை உயர்த்துக; அதனைக் கீழே தள்ளிவிடாதே, ஆன்மாவே ஆன்மாவுக்கு கண்பன், அதுவே தனக்குப் பகைவன்' எனக் கண்ணன் இன்னவாறு விசயனு க்குப் போதித்துள்ளான். போதனை ஆழ்ந்த சிக்தனையுடையது. பொறிகளை அடக்கி நெறியே ஒழுகுபவன் தனக்கு இனிய உறவாய் அரிய மேன்மைகளை விளைத்துக் கொள்கிருன்; அல்லாத வன் தனக்கே கொடிய சத்துருவாப் அல்லல்களை ஆக்கிக் கொள் கின்ருன் என்னும் உண்மையை இது இவ்வாறு உணர்த்தியுள் ளது. ஆன்ம நிலை உயர அதிசய மேன்மை வருகிறது. தானலது யாவர்தன் மேன்மைசெய் தக்கார்? தான லது யாவர்தன் கீழ்மை சமைப்பாா? தானலது யாவர்தன் மெய்ப்பகை ஆவார் தானலது யாவர்.தனக்கு உறவு ஆவிார் (பகவற்கிதை) மேலே குறித்த சுலோகத்தின் மொழி பெயர்ப்பாப் இது வந்திருக்கிறது. நெறிதவறிக் கீழாயிழிந்து போகாமல் உயர்ந்து செல்பவனே உத்கம மகானப் ஒளி பெற்று கிற்கின்ருன். நீதிமுறை ஒழுகிவரின் உயர்வாம்: வழுவின் இழிவே, இதனை விழியூன்றி நோக்கித் தெளிவோடு சிந்திக்க வேண் டும். இனிய வழிகளையே பழகி விழுமிய மேன்மைகளை அடை ந்து கொள்வதே மனித சன்மத்தின் மாண்பயன் ஆகும். அரிய பிறவிக்கு உரிய பயனை உரிமையோடு மருவிக் கொள்க. பெறலரும் பிறவியைப் பெற்று வந்துளாய் உறலுறும் உய்தியை உருது கிற்றியேல் இறலுறும் இழிவுகள் எய்தும் ஆதலால் திறலுடன் உயர்கிலே தேர்ந்து கொள்கவே. து_கடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/112&oldid=1326669" இலிருந்து மீள்விக்கப்பட்டது