பக்கம்:தரும தீபிகை 5.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு ல 1669 அறுக்கின்ற மனிதர்களே! கடவுள் உங்களைப் பாவிகள் என்று இகழ்ந்து வெறுத்து இழிக்க நரகத்தில் தள்ளுவன்; விேர் துள்ளி அழுது துடித்து விழுவீர் என்பதாம். o அருளும் அன்பும் மனிதனைப் பண்படுத்தி இன்ப நிலையில் உயர்த்தி எவ்வழியும் திவ்விய மகிமைகளை அருளி வருகின்றன. 'அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை” என்னும் இந்த அருள் மொழி நிறைந்த பொருள் பொதிந்தது. காரண காரிய நிலை களைப் பலவகையிலும் கருதியுணர்ந்து உறுதி தெளிய இது உரு வமைந்துள்ளது. ஒர்ந்து சிந்திக்க வுரியது. பிற உயிர்கள்பால் இரங்கி யருள்பவன் தன் உயிர்க்கு உயர்ந்த பேரின் பத்தைச் செய்து கொள்ளுகிருன். ஆன்மகயை அதிசய மேன்மையாய் மிளிர்கின்றது. அருள் செய்துவருபவன் பரம் பொருளின் அருளைத் தனிஉரிமையா அடைந்து வருகிருன். “Who will not mercie unto others show, How can he mercy ever hope to have?” [Spenser] 'சீவர்களுக்கு இரக்கம் காட்டாதவன் தேவ கருணையை ஒருபோதும்பெறமுடியாது” என்னும் இதஈண்டு ஊன்றிஉணர அரியது. பிற உயிர்கட்கு இரங்கின் கன் உயிர் உயர்கின்றது. எல்லாம் வல்ல இறைவனே எங்கும் இரங்கியருள வுரிய வன் ஆதலால் இரக்கம் அவனுடைய இனிய நீர்மையாய் மருவி யுளது. அதனைப் பெற்றவர் பெரு மகிமை பெறுகின்ருர். “The quality of mercy is not strained, It droppeth as the gentle rain from heaven Upon the place beneath: it is twice blessed; It blesseth him that gives and him that takes.” [Merchant of venice] அருள் நீர்மை மருளில் மருவிய கன்று, ப ம னிடமிருந்து அமுத மழை போல் ஈண்டு அது வந்துள்ளது; அதனை உடைய வரும் உற்றவரும் உயர்ந்த பகிமைகளை அடைந்து கொள்ளு ன்ெருர்’ என இது உணர்த்தியுள்ளது. ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பீயர் அருள் நிலையைப் பொருள் பொதிந்த மொழி களால் பல இடங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். இரக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/130&oldid=1326687" இலிருந்து மீள்விக்கப்பட்டது