பக்கம்:தரும தீபிகை 5.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு:ல 1679 மிருகங்களே ஊனத்தின்று வாழும் இயலபின; இன்னிய மனிதர் அதனே உண்பது அந்தோ கொடிய ஈனம் என்க. இழிந்த பிறவிகள் பலவும் கடந்து மனிதன் மிகவும் உயர்ந்து வத்திருக்கிருன். அரிதாக அமைந்த இந்தப் பிறவி துயரங்கள் யாவும் நீங்கி உயர்கதியை அடையவே நேர்ந்துள்ளது. விதி விலக்குகளை அறிந்து மதிநலத்தோடு எவ்வழியும் செவ்வையாக அவன்ஒழுகிவரும்உரிமையைத்தழுவிவந்துளான். அல்லல்யாதும் படியாமல் கல்லதை நாடிச் செய்பவனே நலம் பல பெறுகிருன், "பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்" (ஒளவையார்) என்றது மனித சமுதாயத்துக்கு ஒரு நல்ல போதனையாய் வந்துளது. கொல்லாவிரதத்தில்எல்லாகலமும்இசைந்திருக்கிறது. இவ்வாறு அல்லது கடிந்து நல்லது செய்யவந்த மனிதன் பொல்லாத புலாலை உண்பது போதம் இழந்த எதமாய் நின்றது. மதிகேடான பழக்கம் எப்படியோ புகுந்து ஈனப்படுத்தி யிருக் கிறது. மடமையில் மருவியது கொடுமையாய்த் தொடர்ந்துளது. உண்ணும் உணவை மனிதன் உணர்வோடு சுவைசெய்து உண்ணுகின்றன்; மிருகங்கள் அ வ் வா று உண்ணமுடியா; கண்டவற்றைத் தின்று அவை காலம் கழிக்கின்றன. உயர்ந்த அறிவுடைய மனிதன் இழிந்த விலங்குகள்போல் ஈன ஊனத் தின்பது எவ்வழியும் இழுக்கேயாம். 'காய்கழுகு கூகை கரிகாகம் ஈஎறும்பு பேயிவைகள் ஆவி பிரிந்தவூன்-கேயமொடு தான்அருந்தல் அல்லாது சற்கா ரியமனிதர் தான்அருந்த லாவதோ தான். (புலால்மறுத்தல்) விதி நியமங்களை உணர்ந்து ஒழுக உரிய மனிதன் ஊனே அருந்துவது ஈனமாம் என இது உணர்த்தியுள்ளது. இழி பிராணிகள் தின்பதை உயர் மனிதன் உண்ண நேர்ந்தது துயரப் பழியாய்த் தொடர்ந்து வந்தது. பாவத் தீமையான புலாலை உண்பதால் மேலான கதிநிலைகளை அவன் இழந்து விடுகின்ருன். 'தவகதியை வேண்டுபவர் உயிரில் சிடம் தினல் தவிர்க தவம் அழித்தாங்கு அவகதியை வேண்டுபவர் கழுகு கரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/140&oldid=1326697" இலிருந்து மீள்விக்கப்பட்டது