பக்கம்:தரும தீபிகை 5.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1692 த ரும தீபிகை புழுவும் தசையும் வெண்ணினமும் பொதிந்த குரம்பை வீக்குதற்குக் கழியூன் நுகர்ந்தோர் கொடு நரகில் கம்பகாலம் கிடந்தழுந்தி விழைவின் முன்னர்த்தாம் நுகர்ந்த விலங்கும் அவர்தம்மெய்த்தசையை அழிவெம்பசியால் பறித்தருந்தும் என்னும் பான்மை அறிந்தேயோ?” புலால் துறந்திருந்த புள்ளினங்கள் புகழ்ந்து போற்றப்பட் டுள்ள நிலைகளை இவற்ருல் நாம் உணர்ந்துகொள்ளுகிருேம்.

புலிகாரை எண்குறவாதிகள் முன்னம் புலால் அருந்தும் குலனுயிருந்தும் அருள் ஒம்பிமுத்தி கு.அறுகியதென்ஆறு உலகூடுரைப்பசொற் கேட்டும் அருளற்றுழன்றிறக்கும் சிலர்மானுடத்தென்ன செய்வான்புவியில் செனித்தனரே' (அருட்பிரகாசம்) சடக்கடத்துக்கிரை தேடிப் பலவுயிர்தம்மைக்கொன்று விடக்கடித்துக்கொண்டிறுமாந்திருந்து மிகமெலிந்து படக்கடித் தின் அழல்வார்கள்தமைக்கரம் பற்றிகமன் இடக்கடிக்கும் பொழுதேதுசெய்வார் கச்சிஏகம்பனே,

(பட்டினத்தார்) புலால் உண்பதால் விளையும் புலைத்துயரங்களை நினைத்துவருங் தியிருக்கும் இவை ஈண்டு உணர்ந்து சிக்திக்கவுரியன. கொன்று உண்பான் நாச்சாம்” (சிறுபஞ்சமூலம் 10) புலால் உண்பவனது கா புலையாயிழிந்துபடும்; அது செத்த நாவேயாம் எனக் காரியாசான் இங்கனம் கூறியிருக்கிரு.ர்.

அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்;

விலைப்பாவில் கொண்டுஊன் மிசைதலும் குற்றம், சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே LITI (நான்மணிக்கடிகை) ஊன் உணவுக்காக ஆடுகோழிகளை வளர்ப்பதும், விலைக்கு வாங்கிப் புலாலை உண்பதும், பொல்லாத சொல்லுகளைச் சொல் லுவதும், கொல்லுவதும் கொடிய குற்றங்கள் ஆம்என விளம்பி சாகனர் இவ்வாறு விளம்பியுள்ளார். 'இட்ட இரை ஆசையால் எய்தியமீன் தாண்டில்வாய்ப் பட்டதென நாவிரசம் பார்த்துலகர்-கெட்ட இருளார் உலகத்தில் எய்துவர்கள் என்ருர் அருளாரும் நெஞ்சத் தவர்.” --- (இதிகாசம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/153&oldid=1326710" இலிருந்து மீள்விக்கப்பட்டது